துளசிதாசரின்
கிஷ்கிந்தா காண்டம்.
ஓர் ஆய்வு
பதிவு எண் 42
நேற்றைய தொடர்ச்சி
ஹனுமான் இராம இலக்ஷ்மனர்களைப் பார்த்து “வனத்தில் சஞ்சாரம் செய்கின்றீர்களே! உங்களுடைய பாதங்கள் மெல்லிய மலராலான பூமியைச் ஸ்பர்சித்ததும் சிவந்து போய் விடுமே? அப்பேர்பட்ட மேன்மையுள்ள மலர்ப் பாதங்கள் கடினமான மலைப்ரதேசங்களில் ஸ்பரிசம் செய்வதைப் பொறுக்க மாட்டாதவையன்றோ? (தாங்கள் அரண்மனையின் சுகபோகங்கள் அனைத்தையும் அனுபவிக்கத்தகுந்த இராஜ குமாரர்களாக இருந்தும்) வனத்தில் எதையோ தேடிக்கொண்டு அலைந்து போகிறீர்களோ? தாங்கள் எதை என்ன காரணத்தினால் தேடி அலைகிறீர்கள்?” என்று கேட்கிறான்.
.(இங்கு துளசி தாஸர் போடும் பதங்களைக் கவனிக்க வேண்டும். को तुम्ह स्यामल गौर सरीरा இருவரில் இராமன் பெரியவன் இலக்ஷ்மணன் இளையவன். காரணம் இராமன் முன் செல்கிறான். இலக்ஷ்மணன் இராமனைத் தொடர்கிறான். இராமனின் உடலில் அதிக தேஜஸ் தெரிகிறது. அதனால் முதலில் இராமனை ஸ்யாம (கரிய மின்னல்) இலக்ஷ்மணனை கோர் (பொன்னிறத்தான்) என்று கிரமமாக அழைத்தான். துளசி தாசர் சொன்ன கருத்துக்களைத் தான் வால்மீகியும் சொல்லி இருந்தார்.
==========
सिंह विप्रेक्षितौ वीरौ महाबल पराक्रमौ |
शक्र चाप निभे चापे गृहीत्वा शत्रु नाशनौ || ४-३-९
उभौ योग्यौ अहम् मन्ये रक्षितुम् पृथिवीम् इमाम् || ४-३-१५
स सागर वनाम् कृत्स्नाम् विन्ध्य मेरु विभूषिताम्
महा प्रमाणौ विपुलौ तप्त हाटक भूषणौ || ४-३-१८
खड्गौ एतौ विराजेते निर्मुक्त भुजगौ इव |
============
(சிங்கம் போன்ற கூரிய பார்வையைக் கொண்டவர்களாகவும், வீரர்களாகவும், மகா பலசாலிகளாகவும், பராக்கிரமசாலிகளாகவும், இந்திரனின் வில்லைப் போன்ற வில்லை சுமந்திருப்பவர்களாக்வும் தோற்றமளிக்கும் நீங்கள் இந்த தேசத்திற்கு ஏன் வந்தீர்கள்? நான் உங்கள் இருவரையும் மொத்த அகிலத்தையும் காக்கும் தகுதி உள்ளவர்கள் என அறிகிறேன். கடல்கள், வனங்கள், விந்தியம், மேரு {போன்ற மலைகள்} ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்ட மொத்த பூமண்டலத்தையும் ரக்ஷிப்பதற்கு பூமியையும் தகுதியானவர்கள் என்று உங்கள் இருவரையும் நான் கருதுகிறேன். சித்திரமானவையும், வழுவழுப்பானவையும், அற்புதமாகப் பளபளப்பவையுமான இந்த விற்கள் {பொன்னால்} அலங்கரிக்கப்பட்ட இந்திரனின் வஜ்ரத்தைப் போலப் பிரகாசிக்கின்றன.)
(துளசி தாசர் कठिन भूमि कोमल पद गामी என்ற பதத்தைப் பயன் படுத்தி உள்ளார். தங்களுடைய மெல்லிய பாதங்கள் கல்லும், முள்ளும் நிறைந்த இந்த மலைப் பிரதேசத்தில் நடக்க ஏற்றவை அல்ல. அவை மிகவும் நோகும். உரையாசிரியர்கள் இதற்கான விளக்கம் கொடுத்துள்ளனர். அதாவது இவ்வளவு கடினமான பகுதிகளில் நடந்த பிறகும் தங்களுடைய பாதங்கள் மெல்லியதாக அழகாக இருக்கின்றன. தங்களுடைய பாதங்கள் படும் பூமியும் மிருதுவாக ஆகி விடுகின்றது.. உண்மையாகவே தாங்கள் யார்? என்று கேட்கிறார் ஹனுமன்.
தொடரும்
No comments:
Post a Comment