Sunday, March 15, 2026

 



துளசிதாசரின்

கிஷ்கிந்தா காண்டம்.

ஓர் ஆய்வு

  

பதிவு எண் 47 



நேற்றைய தொடர்ச்சி

  

இராம இலக்ஷ்மனர்களைப் பார்த்ததும் அவர்களைப் புகழ்ந்த ஹனுமான் தாங்கள் யார் என்று வினவுகிறான்.

  

यतो वा इमानि भूतानि जायन्ते। येन जातानि जीवन्ति। यत् प्रयन्त्यभिसंविशन्ति। तद्विजिज्ञासस्व। तद् ब्रह्मेति॥

 

என்று தைத்ரிய உபநிஷத்தில் சொல்லியுள்ளபடி ‘எவரால் இந்த உலகம் சிருஷ்டிக்கபடுகிறதோ, எவரால் இந்த உலகம் பாதுகாக்கப்படுகிறதோ, எல்லாம் முடிந்தபின் எவருக்குள் எல்லோரும் சென்று ஐக்கியமாகிறார்களோ அந்த பிரம்மத்தைப் பற்றித் தெரிந்து கொள்ளவேண்டும்”

  

“எவருடைய உத்திரவால் படைக்கப்பட்டு நாங்கள் வானரம், கரடி போன்ற ஜீவ ராசிகளானோமோ தாங்கள் அவரில்லையா (அந்த பிரம்மா இல்லையா?)”

 

துளசிதாசர் “अखिल थुवन पति”  என்ற  பதப் பிரயோகம் தருகிறார்.  இதைச் சொல்லவேண்டிய காரணம் இந்த உலகமே இராவணனால் பாதிக்கப்பட்டுள்ளது. என்பதைத் தெரிவிப்பதற்காக ..உடனே மனித அவதாரம் எடுத்துள்ளீர்\களோ என்பதைக் குறிப்பிட “मनुज अवतार”   என்று குறிப்பிடுகிறார். அதன் காரணம் இராவணனின் மரணம் மனிதனின் கையில் 'राबन मरन मनुज कर जाँचा।' என்று பால காண்டத்திலேயே குறிப்பிட்டுள்ளார். இராவணனின் கொடுமைகளைப் பற்றிச் சொல்லும்போது

 


बरनि न जाइ अनीति घोर निसाचर जो करहिं।

हिंसा पर अति प्रीति तिन्ह के पापहि कवनि मिति॥183॥

 


அரக்கர்களின் கொடுமைகளை வார்த்தையால்  வர்ணிக்க முடியாது என்று எவனொருவன்  அஹிமசையின்பால் நாட்டம் கொள்கிறானோ அவனுடையை பாவங்களுக்கு எல்லையே இல்லை என்று சொல்கிறார். ஆத்யாத்ம இராமாயணத்தில்.


அநீதி அரக்கர் ஆட்சி,

அருளினை மறந்திடு வாழ்ச்சி;

வன்மம் பெருகி பாவம்,

அளவிலா தீமை நிறைந்தது.

======

 

அரக்கர் ஆட்சி — அநீதி பெருக்கு!

அருளை மறந்தோர் — இருள் வழி நடப்பு!

கொலைக் களிப்பில் களிகூரும் மனம்,

பாவம் அளவிலா பெருகிடும் உலகம்!



தொடரும்

No comments: