Friday, March 20, 2026

 

இனிமேல் நம்மை யாரும் பைசாவுக்கு பிரயோஜனம் இல்லை என்று சொல்ல முடியாது.



காரணம் சொத்துகளுக்கு வங்கிகள் reverse mortgage தலை கீழ் கடன் அல்லது மீள் கடன் வழங்குகின்றன. அதாவது வயதானவர்கள் தங்களிடம் உள்ள சொத்துகளை வங்கிகளில் அடமானம் வைத்து கடன் பெற்றுக் கொள்ளலாம். அவர்கள் இறந்தவுடன் வங்கிகள் அந்த சொத்தை விற்று கடனைச் சரி செய்து விடும். இது நம் நாட்டிலும் செயல் முறையில் உள்ளது. இதனால் வயதானவர்கள் யாருடைய தயவையும் எதிர்பாராமல் வாழ்க்கையை அமைதியாக கழிக்க முடியும்.


இதைப் போலவே இந்த மீள் கடன் திட்ட்டத்தின் கீழ் ஒரு புதிய வகையும் சேர்க்கப்பட்டுள்ளது. தனிநபர்கள் தங்கள் இதயம், கல்லீரல், சிறுநீரகங்கள் மற்றும் பிற உறுப்புகளின் மதிப்பிடப்பட்ட மதிப்பின் அடிப்படையில் இந்தக் கடனைப் பெற அணுகலாம், கடனைப் பெற்று அவர்களின் வாழ்நாளில் நிம்மதியாக அனுபவிக்கலாம்.கடன் வாங்குபவர் இறந்தவுடன், அடமானம் வைக்கப்பட்ட உடல் உறுப்புகளை சந்தையில் விற்று வங்கிகள் கடனை நேர் செய்யும்.



இந்தத் திட்டம் அமெரிக்காவில் செயல் படுத்தப்பட்டிருப்பதாக .ஒரு செய்தி படித்தேன். இதற்கு எதிர்மறையான விமர்சனங்கள் வந்திருந்தாலும் "அதிகரித்து வரும் செலவுகளின் சகாப்தத்தில், இயற்கை எங்களுக்கு வழங்கியதை ஏன் பணமாக்கக்கூடாது?"என்றும் வயதானவர்கள் விவாதிக்கின்றனர். நாம் பெற்ற பிள்ளைகள் நம்மை காப்பாற்றுகிரார்களோ இல்லையோ நமது உடல் உறுப்புகள் நம்மைக் காப்பாற்றும். இந்தியாவில் இந்தக் கடன் அறிமுகப்படுத்தப்பட்டால் நல்ல வரவேற்பு கிடைக்கும்.



ரூம் போட்டு யோசிக்கிறாங்கப்பா!!!

 



Banks Unveil Innovative Reverse Loans for Human Organs

No comments: