துளசிதாசரின்
கிஷ்கிந்தா காண்டம்.
ஓர் ஆய்வு
பதிவு எண் 45
நேற்றைய தொடர்ச்சி
அயோத்தியா காண்டத்தில் இராமன் வனவாசிகளிடமிருந்து விடை பெறும்போது அவர்கள் சொல்வதாக துளசிதாசர் ஒரு சுலோகம் சொல்லி உள்ளார்,
============
परसत मृदुल चरन अरुनारे। सकुचति महि जिमि हृदय हमारे॥
जौं जगदीस इन्हहि बनु दीन्हा। कस न सुमनमय मारगु कीन्हा॥
============
(இவர்களுடைய மென்மையான பாதங்கள் பூமியில் பட்டவுடனே சிவந்து போவதைப் பார்த்து, பூமியே கூச்சமடைகிறது..அந்த இறைவன் இவர்களுக்கு வனவாசம் விதித்திருந்தால் , கூடவே பாதையையும் மலர்களால் ஏன் பரப்பி வைத்திருக்ககூடாது?
சிவந்த பாதம் பூமி தொடும் —
சிலிர்க்கும் மனம், நடுங்கும் நிலம்;
அருளின் வழி மலராய் மலர்ந்திட —
அழகிய மார்க்கம் வேண்டும்!
(துளசிதாசர் இங்கு “स्वामी” என்ற பதத்தைப் பயன்படுத்துகிறார். காரணம் ஹனுமன் இராமனைப் பார்த்து உங்களைப் பார்த்தால் தேவர்களைப் பார்ப்பது போல உள்ளது. உங்கள் உடலில் அரச இலக்ஷ்ணங்கள் தெரிகின்றன. அதனால் சுவாமி என்று அழைப்பதாக உரையாசிரியர்கள் தெரிவிக்கின்றனர். பஞ்சாபிஜி என்ற உயையாசிரியர் ஒரு கருத்து சொல்கிறார். அதாவது ‘இந்தக் கோரமான வனத்தில் தாங்கள் சுற்றுவதைப் பார்க்கும்போது ஏதோ வனதேவதை போல தோன்றுகிறது என்று.
(துளசிதாசர் இங்கு மூன்று முறை छत्री रूप फिरहु बन बीरा: “कवन हेतु बिचरहु बन स्वामी ' और 'सहत दुसह बन आतप बाता।' வனம் என்ற வார்த்தையைப் மீண்டும் மீண்டும் பயன்படுத்தியுள்ளார்.. இப்படி வனத்தில் அலைவதைப் பார்த்த ஹனுமன் அதைத் தாங்கிக் கொள்ளமுடியாமல், அவர்களை மேலும் நடக்கவிடாமல் அவர்கள் இருவரையும் தனது தோளில் சுமந்து கொண்டு சுக்ரீவன் இருக்குமிடத்தை அடைந்தான் என்று உரையாசிரியர்கள் தெரிவிக்கின்றனர்)
தொடரும்
No comments:
Post a Comment