Tuesday, March 17, 2026

 




துளசிதாசரின்

கிஷ்கிந்தா காண்டம்.

ஓர் ஆய்வு

  

பதிவு எண் 48

 

நேற்றைய தொடர்ச்சி.................

 

ஆத்யாத்ம இராமாயணத்திலும் ஹனுமன் இராமனிடம் இதே கேள்வியைக் கேட்பதாகச் சொல்லப்பட்டுள்ளது.

 

 

मायया मानुषाकारौ चरन्ताविव लीलया ।

भूभारहरणार्थाय भक्तानां पालनाय च ॥ १

 

“இந்தப் பூமியின் பாரத்தைக் குறைப்பதற்காகவும் பக்தர்களைக்  காக்கவும் தாங்கள் மாயையினால் மனித அவதாரம் எடுத்துள்ளீர்களா?” என்று ஹனுமன் கேட்கிறான்.

 

மேலும்  ஹனுமன் இராமனிடம் தாங்கள் ஒரே உருவில் இரு அவதாரங்களா? என கேள்வி கேட்கிறார். அதவாது தாங்கள் சிவா விஷ்ணுவா? பிரம்மா விஷ்ணுவா அல்லது நர நாராயணர்களா?  அல்லது அகில உலகைக் காக்க வந்த இரட்சகன் இரு உருவில் வந்துள்ளீர்களா? என்று கேட்கிறார். ஆக முதலில் மூன்று தேவர்களா? என்று கேட்டுவிட்டு பிறகு நர நாராயணர்களா என்ற இருவரா? என்று கேட்டுவிட்டு இறுதியில் அகில உலகைக் காக்க வந்த இரட்சகனா என்று ஒருமையில் கேட்கிறார். முதலில் ஸ்தூலம் என்று அனுமானித்துவிட்டு பிறகு சூக்ஷமம் என்று அனுமானிக்கிறார். இறை வடிவத்தை அறிந்து/புரிந்து கொள்ள இதுவே சரியான முறை.. பாகவதத்தில் கூறி உள்ளபடி

 


श्रुत्वा स्थूलं तथा सूक्ष्मं रूपं भगवतो यति: ।

स्थूले निर्जितमात्मानं शनै: सूक्ष्मं धिया नयेदिति ॥ ३९ ॥

  

முக்தியில் ஆர்வமுள்ளவன், முக்தியின் பாதையை ஏற்பவன், நிபந்தனைக்குட்பட்ட வாழ்வின் பாதையில் ஈர்க்கப்படாதவன், யதி அல்லது பக்தன் என்று அழைக்கப்படுகிறான். அத்தகு மனிதன், பகவானின் பிரம்மாண்டமான விஸ்வரூபமான விராட் ரூபத்தைப் பற்றி சிந்திப்பதன் மூலம் முதலில் தனது மனதைக் கட்டுப்படுத்த வேண்டும், பின்னர் இவ்விரு வடிவங்களையும் கேட்ட பிறகு படிப்படியாக மகாவிஷ்ணுவின் ஆன்மீக ரூபமான கிருஷ்ணரைப் பற்றி சிந்திக்க வேண்டும். இவ்வாறு ஒருவனின் மனம் ஸமாதியில் நிலைத்திருக்கிறது. பக்தித் தொண்டின் மூலம், பக்தர்களின் இலக்கான பகவானின் ஆன்மீக வடிவத்தை ஒருவன் உணர முடியும். இதனால் அவரது வாழ்க்கை வெற்றிகரமானதாக மாறுகிறது. 

 

அதாவது महत्-सेवां द्वारम् आहुर् विमुक्ते: என்று கூறப்படுகிறது: முக்தியின் பாதையில் முன்னேற ஒருவன் விரும்பினால், அவன் மகாத்மாக்களுடன், தொடர்பு கொள்ள வேண்டும், மோக்ஷத்தை நாடுபவர்களுக்கு, பெரியவர்களின் சேவை என்பது ஒரு வாயிலாகும்" என்று கூறுகிறார்கள்.

  

பேரருள் பெற்ற பெருமக்கள் சேவை 

பேரொளி வீதி விடுதலைக் கோவில்! 

தீர்வினை தீரும் திருநெறி யாதும் 

தெய்வம் எனக் காண் — சத்புருஷன் பாதம்

 

  ஏனென்றால் அத்தகைய சங்கத்தில் ஸ்ரீமத் பாகவதத்தில் விவரிக்கப்பட்டுள்ள பரம புருஷ பகவானின் பெயர், உருவம், குணங்கள் மற்றும் சாதனங்களைப் பற்றி கேட்பதற்கும், விவரிப்பதற்கும், நாமஜபம் செய்வதற்கும் முழு வாய்ப்பு உள்ளது.


தொடரும்

No comments: