துளசிதாசரின்
கிஷ்கிந்தா காண்டம்.
ஓர் ஆய்வு
பதிவு எண் 36
நேற்றைய தொடர்ச்சி
ஹனுமன் இராம இலக்ஷ்மணர்களை பிரம்மா, விஷ்ணு, சிவன், நர நாராயணன் இவர்கள் ரூபத்தில் கண்டுகளித்ததால் அவர்களை காலில் விழுந்து வணங்கினான் என்று உரையாசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆத்யாத்ம இராமாயணத்தில் இந்தப் பகுதி எவ்வாறு சொல்லப்பட்டுள்ளது?
---------------
युवां त्रैलोक्यकर्ताराविति भाति मनो मम ।
युवां प्रधानपुरुषौ जगद्धेतू जगन्मयौ ॥ १३॥
----------
मायया मानुषाकारौ चरन्ताविव लीलया ।
भूभारहरणार्थाय भक्तानां पालनाय च ॥ १४॥
------------
अवतीर्णाविह परौ चरन्तौ क्षत्रियाकृती ।
जगत्स्थितिलयौ सर्गं लीलया कर्तुमुद्यतौ ॥ १५॥
------------
स्वतन्त्रौ प्रेरकौ सर्वहृदयस्थाविहेश्वरौ ।
नरनारायणौ लोके चरन्ताविति मे मतिः ॥ १६॥
-----------
“ஓ புருஷ ஸ்ரேஷ்டர்களே!! நீங்கள் விரர்களென்று நிதானிக்கக்கூடியவர்கள், சூரியனைப்போல் பிரகாசத்தால் திசைகள் எட்டும் பிசகாசிக்கச் செய்பவர்கள், நீங்கள் மூவுலகங்களையும் சிருஷ்டிப்பவர்சகளென்று நான் நினைக்கிறேன், நீங்கள் முக்கியபுருஷர்கள், உலகுக்குக் காரணமாகியவர்கள். மாயையால் மானிட வடிவம் எடுத்து. விளையாட்டாகச் சஞ்சாரம் செய்பவர்கள் போன்றவர்களாகிறீர்கள். பூபாரத்தை யொழிப்பதற்கும், பக்தர்களைக் காப்பதற்கும் ௮வதாரம் செய்த பசம புருஷர்கள் போலக் காணப்படுகிறிர்கள், நீங்கள் க்ஷத்திரிய வடிவமூடையவர்கள், உலகத்தின் ஸிருவ்டி , ஸ்திதி, சம்ஹாரம் இவைகளை லீலையால் செய்ய எத்தனமுடையவர்கள், ஸ்வதந்திரர்கள் எல்லோசையும் பிரேரணை செய்பவர்கள், எல்லோருடைய இருதயத்திலிருக்கும் ஈஸ்வரனைப் போன்றவர்கள், உலகத்தில் சஞ்சரிக்கும் நர நாராயணர்களென்றே நான் உங்களை ஊகிக்கிறேன்., நீங்கள் யார் என்று எனக்கருளவேண்டும்'” என்று கூறினான்.
அது சரி எல்லோரும் இராமனும் இலக்ஷ்மணனும் நர நாராயணர்களா என்று கேட்கின்றனரே? அந்த நர நாராயணர்கள் யார்? அவர்களின் வரலாறு என்ன?
தொடரும்
No comments:
Post a Comment