Wednesday, March 11, 2026

 



துளசிதாசரின்

கிஷ்கிந்தா காண்டம்.

ஓர் ஆய்வு

 

 

பதிவு எண் 43

 

நேற்றைய தொடர்ச்சி

 

இவ்வளவு கடினமான பகுதிகளில் நடந்த பிறகும் தங்களுடைய பாதங்கள் மெல்லியதாக அழகாக இருக்கின்றன. தங்களுடைய பாதங்கள் படும் பூமியும் மிருதுவாக ஆகிவிடுகின்றது.. உண்மையாகவே தாங்கள் யார்? என்று கேட்கிறார் ஹனுமன்.

 

அவர்களின் பாதங்களைப் பற்றி துளசிதாசர் அவரின் கீதாவலி என்ற நூலில் அயோத்யா காண்டத்தில் சொல்லி உள்ளார் )

 

पथिक पयादे जात पङ्कज-से पाय हैं |

मारग कठिन, कुस-कण्टक-निकाय हैं ||

सखी! भूखे-प्यासे, पै चलत चित चाय हैं |

इन्हके सुकृत सुर-सङ्कर सहाय हैं ||

 

பாதயாத்திரை செய்யும் பயணியின் கால்கள்

தாமரை இதழ் போல மென்மையானவை

ஆனால் பாதை மிகக் கடினமானது

வெயில், முள்ளு, கல், காட்டு முட்கள் நிறைந்தது

சகியே! பசியோடும் தாகமோடும்

இருந்தாலும் அவர்களது மனம் சோர்ந்து போவதில்லை

ஏனெனில், அவர்களுடைய முற்பிறவி புண்ணியமும்

இறைவனின் (சங்கரனின்) அருளும் துணையாக இருக்கின்றன!

===========

பாதம் மலரெனப் பாய்ந்த பவனி  

காதல் வழி கண்டு கானல் தடம்; 

பசி தாகம் தாங்கி நடப்போர்  

நல்லொழுக்கம் நாதன் அருள்.

----------

மலர்பாதம் கொண்டும் மலைப்பாதை தாண்டும், 

அரிவாளின் கூர்மை போல் கானல் தடம்; 

பசி தாகம் எரியும், உயிர் தளராது  

அருள் நம்பிக்கை நம்மை நடத்தும் வழி!

 தொடரும் 


No comments: