Tuesday, March 3, 2026

 


 

 

துளசிதாசரின்

கிஷ்கிந்தா காண்டம்.

ஓர் ஆய்வு

 

 

பதிவு எண் 35

 

நேற்றைய தொடர்ச்சி

 

இங்கு ஒரு கேள்வி . அந்தணர் வேடத்தில் இருக்கும் ஹனுமன் இப்படி க்ஷத்ரியர்கள் காலில் விழுந்து வாங்கலாமா? இங்கு ஹனுமன் இளம் பிராமண மாணவன் வேடத்தில் உள்ளான். இராம இலக்ஷ்மணர்கள் மரவுரி தரித்து துறவி உடையில் உள்ளனர். மேலும் அவர்கள் வயதில் பெரியவர்கள். அவர்களிடம் ஒரு தெய்வீகத் தன்மை தெரித்தது. அதனால் அவர்களுக்கு மரியாதை செலுத்த வேண்டியது ஹனுமனின் கடமை ஆகிற்று. இது தவிர இங்கு இரண்டு காரணங்கள் சொல்லப்படுகின்றன. ஒன்று இராமனும் இலக்ஷ்மணனும் முன்பின் தெரியாத அன்னியர்கள். அவர்களிடம் முதன்முதலில் பேசும்போது அவர்களுக்கு தனது மீது நல்ள அபிப்ராயம் ஏற்படவேண்டும் என்று விரும்பினார், அது எப்படி சாத்தியம்? அவர்களை விழுந்து வணங்கி பவ்யமாக பேசுவதன் மூலம் ஹனுமனுடன் பேசுவது ஒரு ஆனந்தத்தை ஏற்படுத்துகிறது என்ற எண்ணம் அவர்கள் மனதில் வரவேண்டும்.. அப்படி இல்லை என்றால் அவர்கள் இருவரும் ஹனுமனிடம் பேசாது சென்று விடுவர். சுக்ரீவன் எந்த நோக்கத்திற்காக ஹனுமனை அனுப்பினானோ அந்த நோக்கம் நிறைவேறாமல் போய்விடும்.

 

மற்றொன்று ஹனுமன் தனது வானர சரீரத்தை ஆடைகளுக்குள் மறைத்து இளம் பிராம்மண வேடத்தில் வந்துள்ளான். அதனால் ஹனுமன் அவர்களின் கண்களை நேராகப் பார்க்கவிரும்பால் அவர்களின் பாதங்களைப் பணிந்து வணங்கிக் கொண்டிருந்தான். ஒருக்கால் அவர்கள் தனது வேடத்தைக் கண்டுபிடித்துவிட்டால் தன்னைப் பற்றி தவறாக எண்ணக்கூடும் என்ற பயத்தில் அவ்வாறு செய்தான் என்று சொள்ளப்படுகிராது.

 


அடுத்த அடியிலேயே ஹனுமன் அவர்களைப் பார்த்துக் கேட்கிறார்.


 

की तुम्ह तीनि देव महँ कोऊ। नर नारायन की तुम्ह दोऊ॥

की तुम्ह अखिल भुवन पति लीन्ह मनुज अवतार॥1

जग कारन तारन भव भंजन धरनी भार।

की तुम्ह अखिल भुवन पति लीन्ह मनुज अवतार


 

(இதற்கு உரையாசிரியர்கள் சொல்வதாவது . ஹனுமன் அவர்களை பிரம்மா, விஷ்ணு, சிவன், நர நாராயணன் இவர்கள் ரூபத்தில் கண்டுகளித்ததால் அவர்களை காலில் விழுந்து வணங்கினான்.

 

தொடரும்

 


No comments: