Thursday, March 12, 2026

 



துளசிதாசரின்

கிஷ்கிந்தா காண்டம்.

ஓர் ஆய்வு

 

 

பதிவு எண் 44

 

நேற்றைய தொடர்ச்சி

 

ஹனுமன் இராம இலக்ஷ்மனர்களைப் பார்த்துக் கேட்கிறார்.

 


कर धन्‌ तीर श्या गौरव शरीर घरे लन सुनि चीर धीर वीर बल भौन हौ ।

शोभा अभिराम नव नीरज ललान ठग क्षाम खविधान इत कीन्हों कं गोन हौ ॥

सोस लट 1जट सुख चंद्‌ खि लट लंदि ' संद्‌ मंद हास सुलिलास् सुख दोन ही।

करत सनाय घनं नान के नाय यह पृर्छौ जोरि हाथ जगनाथ तुन कौन ही ॥

 

கையில் வில், அம்பு ஏந்தியவர்கள்; சாமநிறமும் பொன்னிறமும் கலந்து ஒளிரும் உடலமைப்பு; மான் தோலாடை, துறவற உடை;அமைதி, வீரியம், பெருமை நிறைந்த தோற்றம்;வீரர்களுக்குரிய திடமான உடல்;ஆனாலும் முனிவரைப் போல அமைதியான முகம்.உங்கள் அழகு புதிய தாமரைப்பூ போல உள்ளது;முகத்தில் மெல்லிய சிரிப்பு; சடைமுடி, துறவற அடையாளம்;


ஒளி வீசும் முகம்;இவ்வளவு வீரத் தோற்றத்துடன்,இந்தக் காட்டில் ஏன் வந்தீர்கள்? கைகளை கூப்பி நான் கேட்கிறேன் —“ஓ மஹாநுபாவர்களே! நீங்கள் யார்?” என்றான் ஹனுமன்.

 

கையில் வில்லும் அம்பும் சிவப்பு நிற உடல்

காதில் குண்டலம் மஞ்சள் பட்டாடை அணிந்து

தைரியசாலி, வீரன், பலசாலி, அழகின் உருவமே!

---------------

புதிய தாமரை மலர் போல் மென்மையான கண்கள்

அழகு மிகுந்த முகம் எல்லோரையும் ஏமாற்றும் திருடன்!

இவ்வளவு அழகையும் இப்படி ஒரே இடத்தில்

யார் இணைத்து வைத்தார்?

-----------------

வெள்ளையான புன்னகை மெதுவான சிரிப்பு

சந்திரன் போல் குளுமையான முகம் மயக்கும் பார்வை

இரண்டு கண்களும் இன்பம் தரும் குளிர்ச்சியான நிலவுகள்!

----------------

கையை வீசி நடந்து வருகிறாய்

நந்தகோபனின் மகனே! யசோதையின் செல்வமே!

கைகூப்பி வணங்கி நிற்கிறோம்

ஜகன்னாதா! ஜகத் குருவே! **நீ யார்?**

 

தொடரும்...............


No comments: