Monday, March 16, 2026

 



துளசிதாசரின்

கிஷ்கிந்தா காண்டம்.

ஓர் ஆய்வு

 

பதிவு எண் 47

 

நேற்றைய தொடர்ச்சி

 

भूमिर्भारेण मग्ना दशवदनमुखाशेषरक्षोगणानां

धृत्वा गोरूपमादौ दिविजमुनिजनैः साकमब्जासनस्य ।

गत्वा लोकं रुदन्ती व्यसनमुपगतं ब्रह्मणे प्राह सर्वं

ब्रह्मा ध्यात्वा मुहूर्तं सकलमपि हृदावेदशेषात्मकत्वात् ॥ ६॥

 

சிவன் பார்வதிக்கு இராமனின் வரலாற்றை சொல்லும்போது, முதலில் இராம அவதாரம் எடுத்த கதையைச் சொல்லுகிறார்.  அதில் இராவணன் மற்றும் அரக்கர்களின் கொடுமையையும் அவர்களின் பாரத்தையும் தாங்க முடியாமல் பூமா தேவி ஒரு பசுவின் உருவில் தேவர்களையும் முனிவர்களையும் அழைத்துக் கொண்டு பிரம லோகம் சென்று பிரம்மாவிடம் அழுது கொண்டே இராவணனைப் பற்றி முறையிட்டு தங்களைக் காக்குமாறு வேண்டுகிறாள். அதைக் கேட்ட ஒரு நொடியில் பிரம்மா என்ன செய்ய வேண்டும் என்று தீர்மானித்து விட்டார். உடனே அவர் மகாவிஷ்ணுவிடம் சென்று முறையிடுகிறார்.

 

भगवन् रावणो नाम पौलस्त्यतनयो महान् ।

राक्षसानामधिपतिर्मद्दत्तवरदर्पितः ॥ २३॥

 ---------

त्रिलोकीं लोकपालान्श्च बाधते विश्वबाधकः ।

मानुषेण मृतिस्तस्य मया कल्याण कल्पिता ॥ २४॥

 ------------

अतस्त्वं मानुषो भूत्वा जहि देवरिपुं प्रभो ॥ २५



  “முனிவர் புலஸ்தியரின் பேரன் யாராலும் தன்னைக் கொல்ல முடியாத வரம் ஒன்று என்னிடம் வாங்கி அதன் காரணமாக மூன்று உலகங்களிலும் உள்ள தேவர்கள் முனிவர்கள் எல்லோரையும் ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறான். அவன் செய்யும் கொடுமைகளுக்கு அளவே இல்லை. அவனுக்கு ஒரு மனிதன் மூலம் மரணம் கிடைக்கவேண்டும் என்று நான் தீர்மானித்துள்ளேன். தாங்கள் மனித அவதாரம் எடுத்து அவனை வதைத்து எல்லா உலகங்களையும் காத்தருள வேண்டுகிறேன்”  என்று மகாவிஷ்ணுவிடம். வேண்டிக்கொண்டார். “அந்த மனித அவதாரம் தாங்கள்தானா? என்று ஹனுமன் வினவினான்.

 

தொடரும்

 

No comments: