துளசிதாசரின்
கிஷ்கிந்தா காண்டம்.
ஓர் ஆய்வு
பதிவு எண் 49
நேற்றைய தொடர்ச்சி.................
ஆனால் ஹனுமன் கேட்ட எந்த கேள்விகளுக்கும் இராமன் விடை சொல்லவில்லை. காரணம் ஹனுமன் சொன்ன பிரம்மா, விஷ்ணு, சிவன், நர நாராயணன் இவர்கள் யாரையும் விட தன்னை உயர்வாகக் காட்டிக் கொள்ள விரும்பவில்லை. சிவபெருமான் இராமாயணக் கதையைப் பார்வதியிடம் சொல்லுகின்றார். இராமனின் பிறப்பைப் பற்றி சொல்லும் சமயம்
हृदयँ बिचारत जात हर केहि बिधि दरसनु होइ।
गुप्त रूप अवतरेउ प्रभु गएँ जान सबु कोइ॥
“மனதிற்குள் எனக்கு குழந்தை இராமனைப் பார்க்கவேண்டும் என்ற ஆவல் உள்ளது. இராமனே யாருக்கும் தெரியாமல் மனிதனாக அவதாரம் எடுத்துள்ளார். இந்த நேரத்தில் நான் அவரைப் பார்க்கச் சென்றால் எல்லோருக்கும் அவதார ரகசியம் தெரிந்து போகுமே. அதனால் நான் செல்லவில்ல” .இதனால் தான் இராமன் தனது அவதார ரகசியத்தை வெளியே ஹனுமனிடம் சொல்ல விரும்பாமல் தன்னை ஒரு மனிதனாகவே காட்டிக் கொண்டான்.
ஹனுமனுக்கு இராமனின் பதில்
कोसलेस दसरथ के जाए । हम पितु बचन मानि बन आए॥ १॥
नाम राम लछिमन दोउठ भाई । संग नारि सुकुमारि सुहाई॥ २॥
इहाँ हरी निसिचर बेदेही। बिप्र फिरहिं हम खोजत तेही॥ ३॥
आपन चरित कहा हम गाई । कहहु बिप्र निज कथा बुझाई॥ ४॥
இதனைக் கேட்ட ஸ்ரீ இராம பிரான் கூறினார் “ நாங்கள் கோசல நாட்டு மன்னர் தசரதனின் மைந்தர்கள். தந்தையின் கட்டளையை ஏற்று வனத்திற்கு வந்தோம்”. இங்கு தனது அவதார ரகசியத்தை வெளிப்படுத்தவில்லை (இராமன் வனவாசத்திற்கு கிளம்பும்போதே தனது தாயான கௌசல்யாவிடம் சந்கேதமாகத் தெரிவித்து விட்டான். துளசிதாசர் அயோத்திய காண்டத்திலேயே நமக்குத் தெரிவித்துவிட்டார்.
पिताँ दीन्ह मोहि कानन राजू। जहँ सब भाँति मोर बड़ काजू॥3॥
தாயிடம் இராமன் சொல்கிறான் “அன்னையே! தந்தை வனராஜ்ஜியத்தை எனக்கு தந்தருளியுள்ளார்.. அங்குதான் எனக்கு முக்கியமான வேலைகள் உள்ளன” என்று சூசகமாகச் சொல்லிவிட்டான்.)
தொடரும்
No comments:
Post a Comment