துளசிதாசரின்
கிஷ்கிந்தா காண்டம்.
ஓர் ஆய்வு
பதிவு எண் 60
நேற்றைய தொடர்ச்சி
மீண்டும் துளசிதாசரிடம்.......................
பிறகு ஹனுமன் மனதில் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு பகவானைப் போற்றினார். தமது தலைவனை அடையாளம் கண்டு கொண்ட அவருக்கு மட்டற்ற மகிழ்ச்சி. ஸ்ரீ இராமனைப் பார்த்து ஹனுமான் “சுவாமி! நான் தங்களைக் கேட்டவை அனைத்தும் நியாயமானதே. பல்லாண்டுகளுக்குப் பிறகு தங்களைப் பார்க்கிறேன். அதுவும் தவசி கோலத்தில். நான் ஒரு குரங்கு. அதனால் குரங்கு புத்திக்கு ஏற்ப உங்களை ஏதேதோ கேட்டேன். நான் உங்களைப் புரிந்து கொள்ளவில்லை. ஆனால் நீங்கள் மனிதனைப் போல என் கதையைச் சொல்லும்படி கேட்பது விந்தையினும் விந்தை” என்றான்.
“निज नाथहि चीन्हीं” பல ஆண்டுகளுக்குப் பிறகு தங்களைப் பார்க்கிறேன். அதுவும் தபஸ்வி கோலத்தில் . இங்கு தான் மீண்டும் அந்த பத்ம இராமாயணத்தை நமக்கு நினைவு படுத்துகிறார், சிறு வயதில் இராமுனுடன் விளையாடியுள்ளார். பல ஆண்டுகள் ஓடி விட்டன. அதுவும் தவசி கோலத்தில் வேறு இருப்பதால் உடனே அடையாளம் தெரியவில்லை என்பதாகச் சொல்கிறார். அதனால் நான் கேட்டதில் நியாயம் இல்லை. ஆனால் ஒரு மனிதனாக நீங்கள் கேட்டதில் என்ன நியாயம்? நீங்கள் பரப்பிரம்மம், எல்லாம் அறிந்தவர். அப்படி இருக்கும்போது தாங்கள் என்னிடம் எப்படிக் கேள்வி கேட்கிறீர்கள். தாங்கள் எல்லாம் தெரிந்தவர்தானே? என்று ஹனுமன் நினைக்கிறான்.
तव माया बस फिरउँ भुलाना। ता ते मैं नहिं प्रभु पहिचाना।।5।
एकु मैं मंद मोहबस कुटिल हृदय अग्यान।
पुनि प्रभु मोहि बिसारेउ दीनबंधु भगवान॥2
“நானோ தங்கள் மாயாவசத்தால் என்னை மறந்து திரிந்து கொண்டிருக்கிறேன். எனவே என் சுவாமியைக் கண்டுபிடிக்க முடியவில்லை.”
प्रष्टव्यं योग्यमस्माकं त्वं पृच्छसि कथं नृवत्।
मायावश्यो भ्रमाम्यत् प्रभु न ज्ञातवानतः॥
“நான் உங்கள் மாயையால் கட்டுண்டவன். ஆம். எனக்கு காலத்தின் கொடுமையினால், விதியின் கடுமையினால் பல அவகுணங்கள் ஏற்பட்டுள்ளன. இருந்த போதிலும், ஸ்வாமி ! நான் உனக்கு சேவகம் செய்யப் பிறந்திருக்கும் புத்திரன் அல்லவா? என் பிரபுவாகிற நீர்,எனக்கு எஜமானரல்லவா? (அதாவது நான் மாயையில் சிக்கி சுற்றிக் கொண்டிருக்கிறேன். ஆனால் நீங்கள் என்னுடன் விளையாடியவர் ஆயிற்றே. தாங்கள் என்னை மறந்து விட்டீர்களா?” என்று கேட்கிறான்)
தொடரும்
No comments:
Post a Comment