துளசிதாசரின்
கிஷ்கிந்தா காண்டம்.
ஓர் ஆய்வு
பதிவு எண் 61
நேற்றைய தொடர்ச்சி
“நான் உங்கள் மாயையால் கட்டுண்டவன். ஆம். எனக்கு காலத்தின் கொடுமையினால், விதியின் கடுமையினால் பல அவகுணங்கள் ஏற்பட்டுள்ளன. இருந்த போதிலும், ஸ்வாமி ! நான் உனக்கு சேவகம் செய்யப் பிறந்திருக்கும் புத்திரன் அல்லவா? என் பிரபுவாகிற நீர்,எனக்கு எஜமானரல்லவா? (அதாவது நான் மாயையில் சிக்கி சுற்றிக் கொண்டிருக்கிறேன். ஆனால் நீங்கள் என்னுடன் விளையாடியவர் ஆயிற்றே. தாங்கள் என்னை மறந்து விட்டீர்களா?” என்று இராமனிடம் ஹனுமன் கேட்கிறான்.
जदपि नाथ बहु अवगुन मोरें। सेवक प्रभुहि परै जनि भोरें॥
नाथ जीव तव मायाँ मोहा। सो निस्तरइ तुम्हारेहिं छोहा॥1॥
“இதில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லை. சுவாமி! ஜீவர்கள் அனைவரும் உங்கள் மாயையினால் தானே கட்டுண்டு நிற்கிறார்கள். உனது அருள்தான் அவர்களை உய்விக்கும். அண்ணலே!
* ता पर मैं रघुबीर दोहाई। जानउँ नहिं कछु भजन उपाई॥
सेवक सुत पति मातु भरोसें। रहइ असोच बनइ प्रभु पोसें॥2॥
“உன் மேல் ஆணை உம்மை பூஜிப்பதோ உம்மை அடைவதற்கு யோகசாதனகளைச செய்வதோ எனக்கு ஒன்றும் தெரியாது. எங்கேயாவது சேவகன் தனது எஜமானனை நம்பி வாழ்பவன் கவலைப் பாடுவானா? அது போல் தாயை நம்பி வாழும் குழந்தை கவலைப் படுமா? அதுபோல என்னை ரட்சிப்பவர் தாங்கள் தான். உமது திருவடிகளைச் சரணம் அடைந்து உம்மையே அண்டி நான் வாழ்வேன், துளசிதாசர் இங்கு कछु भजन उपाई॥ என்றப் பதப் பிரயோகம் செய்கிறார். அதாவது உன்னை நினைத்து சிறிதளவே பூஜித்தாலும் தாங்கள் அதை ஏற்றுக் கொள்வீர்கள். ஆனால் எனக்கு அந்தச் சிறிதளவு பூஜைகூட செய்யத் தெரியாது என்று ஹனுமன் பணிவுடன் சொல்ல முயல்கிறார். இந்த சுலோகம் ஹனுமானின் பதினாலாவது ஸ்துதி.. நட்சத்திரங்களில் பதினாலாவது சித்திரை . ஹனுமானின் நட்சத்திரம் சித்திரை. மேற்கண்ட ஸ்லோகத்தை சொல்பவர்களுக்கு நன்மையே நடக்கும்.
தொடரும்
No comments:
Post a Comment