Saturday, March 14, 2026

 



துளசிதாசரின்

கிஷ்கிந்தா காண்டம்.

ஓர் ஆய்வு

  

பதிவு எண் 46

 


நேற்றைய தொடர்ச்சி

  

* मृदुल मनोहर सुंदर गाता। सहत दुसह बन आतप बाता ॥

की तुम्ह तीनि देव महँ कोऊ। नर नारायन की तुम्ह दोऊ॥5॥

जग कारन तारन भव भंजन धरनी भार।

की तुम्ह अखिल भुवन पति लीन्ह मनुज अवतार॥

 ---------

காட்டினில் துன்பம் கடினமெனத் தாங்கி,

மெய்யினில் இனிமை இசை பாடி —

உலகினைத் தாங்கும் நாராயணன்,

மண்ணில் அவதரித்தான் மகிழ்வோடு!

 

ஹனுமன் இராமனிடம் “சுவாமி! தங்களுடைய சரீர அதிமிருதுவாகவும் இருக்கிறது. நீங்கள் சஞ்சல புத்தியுள்ள என் மனத்தை அபஹரிக்கும் ரூபசவுந்தர்யம் பெற்றிருக்கிறீர்கள். என்ன அழகு, என்ன லாவண்யம் சுவாமி! என் மனம் என்னிடம் நிலைபெறவில்லையே. நான் என்ன செய்வேன்.தங்களின் திருமேனி கண்டேன். பொன்மேனி கண்டேன். இன்றே கழல் கண்டேன்.எழுபிறப்பும் நானறுத்தேன். அடிவண்ணம் தாமரையன்றுலகம் தாயோன் என்கிறபடி உங்களுடிய மிருதுவான  திருமேனி, எவ்விதம் சகிக்க முடியாத வானத்தின் மாருதங்களையும், வெப்பமாயிருக்கும் சுடுகாற்றுக்களையும் சுமக்கின்றனவோ? சுவாமி! தாங்கள் தேவ புருஷர்கர்களா? அஸ்வினி குமாரர்களா? பிரும்மாவா, விஷ்ணுவா, சிவனா அல்லது  இந்த மூன்று  தெய்வங்களாகிய மும்மூர்த்திகளுக்கு மேற்பட்டவனுமாகிய பரப்ரம்மமா?(நிர்குணப் பொருளா?) அல்லது அகில உலகிற்கும் உரிமையாளரான பகவானா?(ஸகுணஸ்வரூபமா?) உலகங்களை சம்சாரக் கடலிலிருந்து மீட்டு  பூமியின் சுமையைக் குறைக்க மானிட அவதாரம் எடுத்து வந்துள்ளீர்களா? என்று கேட்டான்

 

அழகிய கீதம் பாடினான்,

அருண வெயிலையும் தாங்கினான்!

காட்டின் காற்றும் கடினமும் —

கருணையால் சகித்தான்!

 -----

மூவருள் ஒருவன் ஆனான்,

மனித நாராயணன் தோன்றினான்!

உலகின் பாரம் சுமந்தவனே —

அகிலம் காப்பான் அவதரித்தான்!


(ஹனுமன் அவர்களிடம் தாங்கள் பிரம்ம, விஷ்ணு, சிவன் இவர்களில் தாங்கள் யார்? இருப்பதோ இருவர். ஆனால் அவர்களோ மூவர். ஆனாலும் ஹனுமனுக்கு இராமனின் கரிய நிறத்தையும் இலக்ஷ்மணனின் பொன்  நிறத்தையும் பார்த்ததும் ஒரு சந்தேகம். பிரம்மா மஞ்சள்/பழுப்பு நிறம், விஷ்ணு கரிய நிறம், சிவன் வெள்ளை/சிவப்பு நிறம். இருவரில் ஒருவர் விஷ்ணுவாக இருக்கலாம். அப்படியானால் மற்றொருவர்? ஆக இவர்கள் அந்த மூவராக இருக்க வாய்ப்பில்லை. அப்படி என்றால் இணை பிரியாது இருக்கும் இவர்கள் நர நாராயணர்களோ?

 

அடுத்து जग कारन तारन भव என்ற இரு பதங்களைப் போடுகிறார் துளசிதாசர். அதாவது உலகினுள் வருவதும் உலகிலிருந்து விடுதலை பெறுவதற்கும் காரணமானவரே என்கிறார்.

  

बंध मोच्छ प्रद सर्बपर माया प्रेरक सीव॥

 

அதாவது கர்மவினையின்படி  பந்தத்தையும் முக்தியையும் தருபவன், அனைத்திற்கும் அப்பாற்பட்டவன் மாயையின் தூண்டுதலுமான கடவுள் என்கிறான் ஹனுமன்.

 

தொடரும்

 

 

No comments: