துளசிதாசரின்
கிஷ்கிந்தா காண்டம்.
ஓர் ஆய்வு
பதிவு எண் 34
நேற்றைய தொடர்ச்சி
சுக்ரீவன் ஹனுமனை அந்தணச் சிறுவன் வேடம் புனைந்து இராம இலக்ஷ்மn\ணர்களைச் சந்திக்க அனுப்புகிறான். அவ்வாறு அனுப்பும்போது அவன் சொல்வதாவது
“உனது சைகையை வைத்து அவர்கள் யார் என்று நான் புரிந்து கொள்வேன். வாலி இதுவரை பலரை என்னைக் கொல்ல அனுப்ப்பியுள்ளான். அவர்களை நான் கொன்றுவிட்டேன். அதனால் இவர்கள் இருவரையும் இங்கு அனுப்பியுள்ளான் என்ற சந்தகம் வருகிறது. வஞ்சக எண்ணம் கொண்ட வாலியால் அனுப்பப்பட்டவர்களாக இருந்தால் இவர்களும் வஞ்சகர்களே. என்னைக் கொல்ல வந்திருப்பார் என சந்தேகிக்கிறேன்.நீ அவர்களிடம் பேச்சுக் கொடுத்து அவர்கள் வந்த நோக்கத்தை அறிந்து கொள். நீ பிராமண வேடத்தில் இருப்பதால் உன்னிடம் எதையும் மறைக்க மாட்டார்கள். அவர்கள் இருவரும் வைத்திருக்கும் வில்லைப் பார்த்தால் அவர்கள் பெரிய வீரர்களாக இருப்பர் என நினைக்கிறேன். அவர்கள் வஞ்சக எண்ணம் கொண்ட வாலியால் அனுப்பபட்டவர்களாக இருந்தால் உடனே நான் இந்த மலையை விட்டு ஓடிவிடுகிறேன்”. என்றான்.
===========
हनुमान ! देखना तो जाकर, जो पुरुष इधर को आते हैं ।
दोनों ही तपसी तेजस्वी, मुझे नरसिंह समान सुहाते हैं ।
मातंग शाप बस बालि भ्रात, यद्यपि न यहाँ आ सकता है ।
पर मैं जब तक दुनियाँ में हूँ, वह चैन नहीं पा सकता है ।
सम्भव है उसके गुप्त दूत, मेरा यों भेद लगाते हों।
छल से, बल से या कौशल से, वध करने मुझको आते हों ।
इसलिये प्रथम चतुराई से, सब पता ठिकाना लेना तुम ।
फिर हो मेरा सन्देह सही, तो मुझे इशारा देना तुम।
(Ramayana mahanatak by Ramesh Chandra ranadhir)
============
இங்கு துளசிதாசர் ஹனுமன் உடனே அந்தணரச் சிறுவன் வடிவம் கொண்டு இராமனிடம் சென்றான் என்று சொல்லிவிட்டார்.
बिप्र रूप धरि कपि तहँ गयऊ। माथ नाइ पूछत अस भयऊ॥
அந்தணச் சிறுவன் வடிவம் கொண்டு ஹனுமன் இராமன் அருகில் நெருங்கினார். ஸ்ரீ இராமனின் தெய்வீக அழகைக் கண்டு பரவசம் ஆனார். இராமன் கால்களில் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து எழுந்து வினவலுற்றார்.
தொடரும்
No comments:
Post a Comment