Sunday, February 1, 2026

 



நெற்புதிர் அறுவடை நிகழ்வு

1995 கால கட்டத்தில் நான் வங்கிப் பணியில் இருந்தேன். வேலை நிமித்தம் இராஜபாளையம் அருகில் உள்ள சேத்தூர் என்ற கிளையில் தனிக்கைக்க்காக வந்திருந்தேன். எனது மாமனார் மிருதங்கம் வாசிப்பவர். அந்தக் காலத்தில் அவர் கச்சேரிக்காக அங்கு வந்தால் சேத்தூர் ஜமீன் வீட்டில் தங்குவதகச் சொல்வார். அவர்களால் நிர்வக்க்கப்பட்ட தேவதானம் சிவன் கோவிலைப் பற்றி நிறையச் சொல்லுவார். பின்னர் அந்தக் கோவில் அறநிலையத் துறை வசம் வந்துவிட்டது.


ஒரு நாள் மாலை அந்தக் கோவிலைப் பார்க்கச் சென்றென். , கோவில் குளத்தைப் பார்த்ததும் மனது கனத்தது, தண்ணீர் இல்லாமல் வறண்டிருந்தது. நடுவில் உள்ள மண்டபம் பாளம் பாளமாக வெடித்து இருந்தது கோவிளின் உள்ளே நுழைந்ததும் ஒரே இருள். அந்தப் பெரிய புராதன ஆகமக் கோவிலைப் பார்த்ததும் மிகுந்த வேதனைப் பட்டேன். அங்கு ஒருவர் இருந்தார். அவரிடம் பேச்சுக் கொடுத்ததும் ஒரு காலத்தில் ஆயிரம் பசுக்கள் இருந்த கோவில் என்று அந்த இடத்தைக் காண்பித்தார். கோவிலுக்கு நிறைய நிலபுலங்கள் இருந்தும் யாரும் குத்தகைப் பணம் தருவதில்லை. அந்தப் பணமே கோவிலைப் பராமரிக்கப் போதுமானது என்று தெரிவித்தார். இன்று அந்தக் கோவிலைப் பற்றி தெரியவில்லை.

இதைச் இங்கு சொல்ல வந்த காரணம். சமீபத்தில் இலங்கை நல்லூர் கந்தசாமி கோவிலுக்குச் சென்று வந்தேன். மிக நன்றாகப் பராமரிக்கப்பட்டு வரும் கோவில், இன்று தைப்பூசம். அந்தக் கோவிலைப் பற்றிய செய்தி ஒன்று பார்த்தேன்,

தைப்பூச தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் ஶ்ரீ கந்தசுவாமி தேவஸ்தானத்தின் நெற்புதிர் அறுவடை நிகழ்வு இன்று (31) காலை இடம்பெற்றது. தைப்பூச தினத்துக்கு முதல் நாள் கொண்டாடப்படும் ‘புதிர் தினம்’ எனும் இந்த பாரம்பரிய நிகழ்வில் தேவஸ்தான அறங்காவலரும் சிவாச்சாரியாரும் முதலாவது புதிரை அறுவடை செய்ய தேவஸ்தானத்திற்கு சொந்தமான மறவன்புலவில் உள்ள வயலுக்குச் செல்வார்கள். அந்த வயலில் பூஜை வழிபாட்டுடன் அறுவடை செய்யும் நெல்லில் இருந்து அமுது தயாரித்து நல்லூர் கந்தசுவாமிக்கு படையல் வைத்து பூசைகள் செய்வது வழக்கம்.இவ்வழிபாட்டு முறை நல்லூர் ஶ்ரீ கந்தசுவாமி தேவஸ்தானத்தின் மரபாக பண்பாட்டு விழாவாக பேணப்பட்டு வருகிறது., நல்லூர் கந்தன் ஆலயத்தில் தொன்றுதொட்டு இடம்பெற்றுவரும் இப்புதிர் விழா 292ஆவது ஆண்டாக இவ்வருடம் கொண்டாடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.. கீழ் உள்ள படங்களைப் பாருங்கள் அவர்கள் எல்லோரும் எவ்வளவு சிரத்தையுடனும் அர்ப்பணிப்புடனும் செயல் படுகிறார்கள் என்று. மெய் சிலிர்க்கிறது. இங்கு அந்த சிரத்தை அர்ப்பணிப்பு என்று வருமோ?






No comments: