Thursday, February 12, 2026

 




துளசிதாசரின்

கிஷ்கிந்தா காண்டம்.

ஓர் ஆய்வு

 

பதிவு எண் 21

 

நேற்றைய தொடர்ச்சி

 

ஹனுமத் அவதாரத்தைப் பற்றி நாம் பார்த்து வருகிறோம்.. துளசிதாசரின் கிஷ்கிந்தா காண்டத்தில் ஹனுமனின் பகுதி முழுவதுமாக இனிதான் வாப் போகிறது. ஆயினும் நாம் ஹனுமான் புகழை இராமன் வாயால் ஒரு முறை கேட்டு விடுவோமே!

  

ஹனுமனின் வீரத்தைக் கண்ட இராமன் ஹனுமனைப் புகழ்ந்து இலக்ஷ்மணனிடம் பேசுகிறான்.

 

==============

हाथिन सों हाथी मारे, घोरेसों सँघारे घोरे,

रथनि सों रथ बिदरनि बलवानकी।।

 

चंचल चपेट, चोट चरन चकोट चाहें,

हहरानी फौजें भहरानी जातुधानकी।।

 ---

बार-बार सेवक-सराहना करत रामु,

‘तुलसी’ सराहै रीति साहेब सुजानकी।

 ----

लाँबी लूम लसत, लपेटि पटकत भट,

देखौ देखौ , लखन! हनुमानकी।40।.

=================


“இலங்கையின் போர்க்களம் முழுவதிலும் அவர் பார்க்கும் ஒரே ஒரு வீரன் மட்டுமே இருந்தான்.அவன்  அரக்கக் காளையின் கொம்புகளைப் பிடித்து இழுத்தான், அந்த வீரன் வேறு யாருமல்ல, ஹனுமன்தான். அவனது வாலைப் பார். அந்த அழகான வாலில்  அரக்கர்களை சுருட்டி தரையில் ஓங்கி அடிக்கிறான். யானைகள், குதிரைகளுடன் மோதுகிறான்.” இது கோஸ்வாமி துளசிதாசரின் கவிதாவளி ராமாயணத்தில், லங்கா காண்டத்தில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது,.   

 

இது மட்டுமல்லாமல், இராமன் ஹனுமன் மீது தனது பாசத்தை பகிரங்கமாகக் காட்டினான்.அவர் ஹனுமனை  அன்புடன் கட்டிப்பிடித்து, என்றென்றும் கடமைப்பட்டிருப்பதாக அறிவித்தான் .இது சுந்தர காண்டத்தில் வருகிறது

 

==============

सुनु कपि तोहि समान उपकारी। नहिं कोउ सुर नर मुनि तनुधारी॥

प्रति उपकार करौं का तोरा। सनमुख होइ न सकत मन मोरा॥3॥

सुनु सुत तोहि उरिन मैं नाहीं। देखेउँ करि बिचार मन माहीं॥

==============

 

இலங்கையில் சீதை இருக்கும் இடத்தை அறிந்து கொண்டு கிஷ்கிந்தை வந்து இராமனிடம் சீதையைப் பார்த்த விவரங்களையும் சீதை படும் துன்பங்களையும் ஹனுமன் இராமனிடம் தெரிவிக்கிறான். இராமனின் கண்களில் கண்ணீர் துளிர்கிறது. ஹனுமன் இராமனைச் சமாதானப்படுத்தி. “அங்குள்ள அரக்கர்கள் உங்களுக்கு ஒரு பொருட்டே அல்ல. தாங்கள் அவர்களை  எல்லாம் வென்று வருவீர்கள்” என்று சொல்கிறான். அதைக் கேட்ட இராமன் “ஹனுமனே! உன்னைப் போல் எனக்கு உதவி செய்தவர் தேவரோ, மனிதனோ, முனிவரோ, உடல் பெற்ற ஒருவர் கூட இல்லை. நான் உனக்கு பதில் உதவி என்ன செய்து விட முடியும்? என் மனது கூட உனது எதிரில் நிற்க முடியாது. உனது கடனைத் தீர்ப்பது முடியாத காரியம்”  என்று கூறுகிறான்.


=========== 

கேள் கபி! உன்தன் கருணை பெரிது,

காணேன் உலகில் யாரும் சமம்.

தேவர், மனிதர், முனிவர் பலரும் —

உன்தன் துணைபோல் யாரும் இல்லை!

 ----------

என் மனம் உன்தன் பணி நினைத்து,

எதிரே நிற்க முடியாது நன்றி.

உன்தன் கரம் — என் உயிரின் காவல்,

உன்தன் செயல் — என் வாழ்வின் வெற்றி!

=============

 

தொடரும்

 

No comments: