துளசிதாசரின்
கிஷ்கிந்தா காண்டம்.
ஓர் ஆய்வு
பதிவு எண் 23
நேற்றைய தொடர்ச்சி
இந்திரன் அதிர்ச்சி அடைந்து ஹனுமனைத் தடுக்க வலிமை மிகுந்த தனது வஜ்ரா என்ற ஆயுதத்தை ஹனுமன் மீது ஏறிய அது அவனது கன்னத்தைத் தாக்கியது. அதனால் ஹனுமனது தாடை வீங்கியது. ஹனு என்றால் கீழ் தாடை என்ற பொருள் மான் என்றால் அடிப்பது என்று பொருள். இதன் காரணமாகவே ஹனுமன் என்ற பெயர் வந்தது.
ஆனால் வாயு பகவன் தனது அருளால் பிறந்த ஹனுமனுக்கு நிகழ்ந்ததைக் கண்டு கோபமுற்றான். உடனே தனது இயக்கத்தை நிறுத்தினான். இந்த பிரபஞ்சமே மூச்சு விடமுடியாமல் திணறியது. அனைத்து கடவுள்களும் மூச்சுத் தினறலின் விளிம்பில் இருந்தனர்.
அவர்களும் ஹனுமானுக்கு பல வரங்கள் அளித்து ஹனுமனை யாராலும் வெல்ல முடியாத நிலையை உருவாக்கி வாயு பகவானை சமாதானப்படுத்தினர்.
ஹனுமனின் முகம் சிகப்பாக இருப்பதைப் பற்றி இரண்டு கதைகள் உண்டு. ஒன்று அவர் குழந்தையாய் இருக்கும் சமயம் சூரிய வெப்பத்தினால் அவரது முகம் சிவந்து போயிற்று என்று சொல்வர். இரண்டாவது அன்னை சீதை அவரது வகிட்டில் சிந்தூரம் அணிந்து கொள்வாள். அது அவரது சிவந்த முகத்திற்கு இன்னும் அழகைக் கூட்டிற்று. ஹனுமான் அந்த சிந்தூரம் அணிவதற்கான காரணத்தைக் கேட்டபோது அது ஒரு மங்கலமான குறி என்றும் சீதை என்றென்றும் இராமனின் மனைவி என்பதைக் கட்டுவதற்காகவும் சீதையை இராமனிடமிருந்து யாராலும் பிரிக்க முடியாது என்பதைக் காட்டுவதையும் சொல்லப்பட்டது. வகிட்டில் உள்ள சிறிய பொட்டு போன்ற சிந்தூரம் சீதையை இராமனுக்கு அதி ப்ரியமானவளாக செய்யுமானால் முகம் முழுவதும் அந்த சிந்தூரத்தைப் பூசிக்கொண்டால் நாம் இராமனுக்கு எவ்வளவு பிரியமானவனாக ஆவோம் என்று நினைத்து முகம் முழுவதும் சிந்தூரம் பூசிக்கொண்டதாக ஒரு கதையும் உண்டு.
சிறிய வயதில் ஹனுமன் மிகவும் குறும்புக்காரனாக இருந்தான். முனிவர்களின் ஆசிரமத்தைச் சுற்றியுள்ள மரங்களை உடைத்தும், இலைகளை உதிர்த்தும், மரங்களின் பழங்களைத் தின்றும் கொட்டமடித்து அந்த இடங்களையே குப்பை மேடக்கினான். அதனால் யாராவது ஒருவர் நினைவூட்டும் வரை அவன் தனது சக்தியை மறந்து விடுவான் என்று முனிவர்கள் சபித்தனர். சீதையைத் தேட இலங்கை செல்வதற்காக வானரங்களும் கரடிகளும் கடற்கரையை அடைந்த போது எல்லோருமே அந்தக் கடலைத் தாண்டும் சக்தி தங்களுக்கில்லை என்று சொன்னபோது முதியவரான ஜாம்பவான் ஹனுமனுக்கு அவனது சக்திகளை நினைவூட்டி கடலைத் தாண்டிச் செல்லும் சக்தி அவனுக்கு உள்ளது என்ற நம்பிக்கை அளித்தார். அதனால் ஹனுமான் கடலைத் தாண்டிச் சென்று சீதையைக் கண்டதுமல்லாமல் இலங்கையையும் தீக்கிரையாக்கினார்.
தொடரும்
No comments:
Post a Comment