Friday, February 6, 2026

 


துளசிதாசரின்

கிஷ்கிந்தா காண்டம்.

ஓர் ஆய்வு 

 

பதிவு எண் 14

 

நேற்றைய தொடர்ச்சி

  

ஹனுமனின் பெருமை

  

 ஹனுமன் பிரச்னைகளை எப்படி நேர்மறையாக அணுகிறார்? பயத்தில் நடுங்கும் சுக்ரீவனுக்கு எவ்வாறு ஆறுதல் வழங்குகிறார் என்பதை வால்மீகியின்  கிஷ்கிந்தா காண்டத்தின் இரண்டாவது சர்கத்தில் கீழ்க்கண்ட ஸ்லோகங்கள் மூலம் வால்மீகி தெளிவாக எடுத்துரைத்துள்ளார்.

  

ततस्तं भयसंविग्नं वालिकिल्बिषशङ्कितम् ।

उवाच हनुमान्वाक्यं सुग्रीवं वाक्यकोविदः ॥ १३ ॥

सम्भ्रमस्त्यज्यतामेषः सर्वैर्वालिकृते महान् ।

मलयोऽयं गिरिवरो भयं नेहास्ति वालिनः ॥ १४ ॥

यस्मादुद्विग्नचेतास्त्वं प्रद्रुतो हरिपुङ्गव ।

तं क्रूरदर्शनं क्रूरं नेह पश्यामि वालिनम् ॥ १५ ॥

यस्मात्तव भयं सौम्य पूर्वजात् पापकर्मणः ।

स नेह वाली दुष्टात्मा न ते पश्याम्यहं भयम् ॥ १६ ॥

अहो शाखामृगत्वं ते व्यक्तमेव प्लवङ्गम ।

लघुचित्ततयाऽऽत्मानं न स्थापयसि यो मतौ ॥ १७ ॥

बुद्धिविज्ञानसम्पन्नः इङ्गितैः सर्वमाचर ।

न ह्यबुद्धिं गतो राजा सर्वभूतानि शास्ति हि ॥ १८ ॥

सुग्रीवस्तु शुभं वाक्यं श्रुत्वा सर्वं हनूमतः ।

ततः शुभतरं वाक्यं हनूमन्तमुवाच ह ॥ १९ ॥

 

பின்னர், வாலியால் செய்யப்பட்ட பாவத்தை நினைத்து மிகழ்ந்து, மிகுந்த பயத்தால் நடுங்கிக் கொண்டிருந்த சுக்ரீவனிடம், பேச்சில் மிகத் திறமைசாலியான ஹனுமான் இவ்வாறு கூறினான்:

 

இந்த மிகப் பெரிய பதற்றத்தையும் பயத்தையும் எல்லோரும் விட்டுவிடுங்கள்! இது மலைய மலை (ரிஷ்யமூக பர்வதம்) இங்கு வாலிக்கு யாரும் பயம்படத் தேவை  இல்லை, அதாவது வாலியே இங்கு வரவே முடியாது! அவனுக்கு இங்கு வர அஞ்சுதல் உண்டு.

 

நீ முன்பு மிகுந்த பயத்துடன் ஓடி வந்ததற்குக் காரணமான அந்தக் கொடூரமான முகமும் கொடூரச் செயலும் உடைய வாலியை இங்கே நான் காணவில்லை.

 

எந்தப் பாபியான அண்ணனால் உனக்கு இவ்வளவு பயம் ஏற்பட்டதோ, அந்தத் துஷ்ட ஆத்மாவான வாலி இங்கு இல்லை. ஆகவே, சௌம்யா! உனக்கு இங்கு எந்தப் பயமும் இல்லை.

  

ஐயோ! நீ ஒரு குரங்கு என்றாலும் இவ்வளவு சின்ன மனசு உடையவனாக இருக்கிறாயே! எளிதில் பயந்து, தைரியத்தை இழந்து, தன் மனதை ஒரு நிலையில் நிறுத்தாமல் தத்தளிக்கிறாயே!

 

நீ அறிவும், விஞ்ஞானமும், புத்தி கூர்மையும் கொண்டவன். எல்லாவற்றையும் அடையாளங்களை வைத்து (இங்கித ஞானத்தால்) செயல்படு.ஏனெனில், புத்தியில்லாதவன் ஒருநாளும் அரசனாகி எல்லா உயிர்களையும் ஆள முடியாது.என்று கூறினான்.

 

தொடரும்


No comments: