துளசிதாசரின்
கிஷ்கிந்தா காண்டம்.
ஓர் ஆய்வு
பதிவு எண் 23
நேற்றைய தொடர்ச்சி
சிரஞ்சீவி ஹனுமன்
ஹனுமன் இராமனுக்கு மிகப் பிரியமானவன். நெருக்கமானவன். இராமன் இந்த உலகை விட்டுச் செல்லும்போது ஹனுமனும் இராமனுடன் வர விரும்பினான். ஆனால் இராமன் ஹனுமனை இந்த உலகிலே தங்கச் செய்து தனது மகிமை மங்காமல் பார்த்துக் கொள்ளும்படி கூறினான். மேலும் இராம நாமத்தை விடாமல ஜபிப்பவர்களைப் பாதுகாக்கும்படியும் கூறினான். ஆத்யாத்ம இராமயணத்தின் உத்திர காண்டம் ஒன்பதாவது சர்கத்தில் இதைப் பற்றி குறிப்பு உள்ளது.
न र्कर्ञ्चदुत्तरों वायों त्वया मत्कृ तकारणात् ।
एवों र्वभीषणों तूक्त्वा नूमन्तमथाब्रवीत् ॥ ३४॥
मारते त्वों र्चरञ्जीव ममाज्ञाों मा मृषा कृ थाः ।
जाम्बवन्तमथ प्रा र्तष्ठ त्वों िापरान्तरे । ३५॥
இராமன் விபீஷணனிடம் “விபீஷணா! உன்னை இந்தப் பூமி உள்ளளவும் இராஜ்ய பரிபாலனம் செய்யும்படி முன்பே வாக்களித்துள்ளேன். நீயும் அதற்கு உடன்பட்டிருக்கிறாய். ஆதலால் உன் நகரத்திலேயே இருந்து ஆட்சி செய் என்று சொல்லிவிட்டு அருகில் இருந்த ஹனுமனை நோக்கி “ஓ ஆஞ்சநேய! நீ என்றும் சிரஞ்சீவி என்று வரமளித்தோம். ஆகையால் நீயும் உனது விருப்பமான இடத்தில் இருக்கலாம்? என்றான்.
வால்மீகி இராமாயணம் உத்தர காண்டத்திலும் இந்தப் பகுதி 108 வது சர்கத்தில் வருகிறது.
तथेति प्रतिजग्राह रामवाक्यं विभीषणः ॥ राजा रा्तसय्ख्यानां राघवाज्ञामनुखरय् ॥ २३२ ॥ तमेवुक्त्वा काकरख्यो हनूमन्तमथात्रवीत् । जीविते कृतवुद्विस््वं मा अ्रतिज्ञां विरोपय ।॥ ३२३ ॥ मत्कथाः भरचरिष्यन्ति यावछोके इरीश्वर ॥ वैषद्रमख सुप्रीतो मदाक्यमदुपारुयन् ॥ ३४ ॥ एषयुक्तस्तु हलमान्राववेण महात्मना ॥ वाक्यं निज्ञोपयामास परं हर्षमवाप्य च ॥ ३
இராமன் பூமியில் தனது கடமைகளை முடித்துவிட்டு எல்லோரிடமும் சொல்லிக் கொண்டு விடை பெறுகிறான். முதலில் விபீஷணனிடம் வந்து “விபீஷணா! எவ்வளவு காலம் இப் பூமியில் ஜனங்கள் வாழ்கின்றனரோ அவ்வளவு காலம் நீயும் இலங்காபுரியில் உயர்வு பெற்று வாழ்வாய். சந்திர சூரியர்கள் எவ்வளவு காலம் ப்ரகாசிக்கின்றனரோ. இப் பூமி எவ்வளவு காலம் அழியாதிருக்கின்றதோ, என்னுடைய கதை இப் பூமியில் எவ்வளவு காலம் மேன்மை பெற்று விளங்குகின்றதோ அவ்வளவு காலம் நீ அழியாது அரசு செலுத்தி வருக. விபீஷணா! இந்த்ராதி சகல தேவதைகளாலும் எப்பொழுதும் ஆராதிக்கப் படுகின்றவரான இக்ஷ்வாகு குலதேவதையான ஸ்ரீஜகந்நாதனை ஆராதித்து வரக்கடவது’ என்று சொல்ல, விபீஷணனும் திருவுள்ளப்படி நடக்கக் காத்திருக்கின்றேன், என ஒப்புக் கொண்டான்.
பிறகு இராமன் மாருதியைப் பார்த்து ஆஞ்சநேயா!! நீ சிரஞ்சீவி யாயிருக்க ஆசை கொண்டவன். இவ்வுலகத்தில் எனது காதை எவ்வளவு காலம் வழங்குகின்றதோ அவ்வளவு காலம் நீ இப்பூமியில் புகழுடன் வாழ்க” என்று சொல்ல, வாயுகுமாரன் உள்ளம் மகிழ்ந்து சுவாமி திருவுள்ளப்படி நடக்கக் காத்திருக்கிறேன் என்றான்.
இராமநாமம் இதழில் மலர,
இமையாத் தாசன் முன் நின்றான்;
“உனது சேவை அளப்பரியது” என்று
உலகம் கேட்க இராமன் சொன்னான்.
------
“யுகங்கள் கடந்தும் வாழ்ந்திடு நீ,
என் கீர்த்தி ஓங்கும் காலமெல்லாம்;
என் நாமம் ஒலிக்கும் இடமெல்லாம்
உன் ஆன்மா அங்கே தங்கட்டும்.”
----------
வாலின் ஜ்வாலையில் லங்கை எரித்தாய்
வானம் தாண்டி செய்தி தந்தாய்;
சஞ்சீவி மலை தாங்கி வந்து
சகோதரன் உயிர் காத்தாயே!
-------
அதனால் இன்று யுகங்கள் மாறினும்
அஞ்சனேயன் பெயர் அழியாது;
பக்தியின் சின்னம், பலத்தின் மூலன்—
பாரதம் போற்றும் சிரஞ்சீவி!
தொடரும்
No comments:
Post a Comment