அதாகப்பட்டது............
வரிவசூல்
நேற்று பாராளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுவிட்டது. அடுத்து மார்ச் மாதம் வந்துவிடும்.. மார்ச் மாதம் என்றவுடன் நினைவுக்கு வருவது வருமான வரி. வரி செலுத்துவதோடு அல்லாமால் அதற்கான படிவத்தையும் நிரப்பித் தாக்கல் செய்ய வேண்டும். இந்தியாவில் உள்ள மக்கள் தொகையில் ஒரு விழுக்காடு மக்கள் மட்டும் தான் வருமான வரி செலுத்துகின்றனர் என்பது வருத்தத்திற்குரிய விஷயம். ஆனால் இந்த பொது விற்பனை வரி GST அப்படி அல்ல அது எல்லோராலும் செலுத்தப்படவேண்டிய ஒன்று. அதற்கு விதி விலக்கு கிடையாது. உங்களுக்கு தெரிந்திருக்கும் வரி விதிப்பைப் பற்றி விரிவாக தனது அர்த்த சாஸ்திரம் என்ற நூலில் எழுதி உள்ளார். அதில் அவர் சொல்லியிருப்பதாவது “அரசன் மக்களின் சக்திக்கு தகுந்த வரிவிதிக்க வேண்டும். மக்களும் மனமுவந்து தாங்களாகவே முன்வந்து வரிகளை பொருளாகவோ பணமாகவோ செலுத்தவேண்டும் என்று சொல்லி உள்ளார்.
சாணக்யர் காலத்திற்கும் முன்னால் இராமாயண காலத்தில் வரிவித்திப்பை பற்றி வால்மீகி தனது நூலில் குறிப்பிட்டுள்ளார். அதில் அவர் சொல்லி இருப்பதாவது
अधर्मः सुमहान् नाथ भवेत् तस्य तु भूपतेः।
यो हरेद् बलिषड्भागं न च रक्षति पुत्रवत्॥
அதாவது எந்த அரசன் மக்களின் வருமானத்தில் ஆறில் ஒரு பங்கு (கிட்டத்தட்ட 17 விழுக்காடு) வரியாக வசூலித்து விட்டு அந்த மக்களை தனது புதல்வர்களைப் போல பாதுகாக்க வில்லையோ அந்த அரசனை அதர்மம் சூழ்ந்து கொள்ளும்.. இதில் மக்களின் கடமையையும் அரசனின் கடமையையும்பற்றித் தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளது.. அரசன் மக்களிடமிருந்து வரி வசூலிப்பது இயல்பானது. ஆனால் அந்த வரி மக்களின் பாதுகாப்பு, நலன், நீதிநிலை ஆகியவற்றுக்காகவே பயன்படுத்தப்பட வேண்டும்.. மக்களை பிள்ளைகளைப் போல கருதி, அவர்களின் உயிர், சொத்து, சுதந்திரம் ஆகியவற்றை காப்பது அரசனின் தர்மம்.
ஓகே. என்னால வரி செலுத்த முடியாது நான் காட்டில் சென்று பழங்களையும் கிழங்குகளையும் உண்டு தவம் செய்யப் போகிறேன் என்று சொன்னாலும் விதிவிலக்கு கிடையாது. அப்படி என்றால் அவர்களிடம் எப்படி வரி வசூல் செய்வது. ஒன்றும் செய்யத் தேவை இல்லை. கிழங்கும் பழங்களும் உண்டு துறவறம் பூண்டு, முனிவன் செய்யும் உயர்ந்த தவத்தால் கிடைக்கும் புண்ணியத்தில், குடிகளை தர்மத்தோடு காக்கும் அரசனுக்கு நான்கில் ஒரு பங்கு உரிமையாகச் சேரும்.
यत् करोति परं धर्मं मुनिर्मूलफलाशनः ।
तत्र राज्ञश्चतर्भागः प्रजा धर्मेण रक्षतः॥
தன்னைக் காணவந்த இராமனிடம் சரபங்க முனிவர் சொன்னதாக வால்மீகி குறிப்பிட்டுள்ளார்.
என்ன ஒரு நல்ல சிஸ்டம் அன்றைய கால கட்டத்தில் இருந்துள்ளது?
No comments:
Post a Comment