Friday, February 13, 2026

 


  

துளசிதாசரின்

கிஷ்கிந்தா காண்டம்.

ஓர் ஆய்வு

 

பதிவு எண் 22

 

நேற்றைய தொடர்ச்சி

 

புராணங்களில் ஹனுமனின் வரலாறு


புராணங்களின் (புராண வரலாறுகள்) படி, ஹனுமனின்  தாயாரின் பெயர் அஞ்சனா. அவள் குரங்கு மன்னன் கேசரியின் மனைவி. ஹனுமன் கடவுளின் அருளாகப் பிறந்தான்.காற்றுக் கடவுள், மருத் என்றும் அழைக்கப்படுகிறார். எனவே, அனுமன் 'ஆஞ்சநேயர்' அல்லது 'மாருதி'. இருப்பினும், அவரது மிகவும் பொதுவான பெயர் 'ஹனுமன்' என்பது. ஒரு முறை அவர் தேவர்களின் அரசனான இந்திரனின் கடுமையான ஆயுதமான 'வஜ்ரத்தால்' தாக்கப்பட்டார்.. அதன் காரணம் என்ன?

 

பிறந்த சிறிது நேரத்திற்குப் பிறகு குழந்தை ஹனுமனுக்கு அதிகமான பசி எடுத்தது/, சூரியன் உதிப்பதைப் பார்த்தான், அது ஏதோ பழுத்த சிவப்புப் பழம் வானத்திலிருந்து தொங்கிக் கொண்டிருக்கிறது என்று நினைத்தான். உடனே ஒரே பாய்ச்சலாக அதைப் பிடிக்க ஆகாயத்திற்குத் தாவினான்.  தற்செயலாக, அது சூரிய கிரகணத்தின் நேரம். புராணங்களின்படி,  இராகு  சூரியனை விழுங்கச் சென்று கொண்டிருந்தான். ஹனுமன் விரைந்து வருவதைக் கண்டான்.. ஹனுமன் ஏதோ போட்டியாளன் என்று நினைத்துப் பயந்து ஓடிவிட்டான்.. உடனே  இராகு தேவர்களின் ராஜாவான இந்திரனிடம் தனது வழக்கமான உணவு மறுக்கப்படுகிறது என்று புகார் செய்தான். உடனே இந்திரன் இந்த விஷயத்தில் தலையிட எண்ணி தனது ஐராவதம் என்ற வெள்ளை நிற கம்பீரமான யானையின் மீது ஏறி விரைந்தான் .

 

உடனே ஹனுமன் அந்த அந்த யானையை ஏதோ வெள்ளைப் பழம் என்று நினைத்து சூரியனை விட்டு விட்டு அந்த யானையின் மீது குதித்தான். இந்திரன் அதிர்ச்சி அடைந்து ஹனுமனைத் தடுக்க வலிமை மிகுந்த தனது வஜ்ரா என்ற ஆயுதத்தை ஹனுமன் மீது ஏறிய அது அவனது கன்னத்தைத் தாக்கியது. அதனால் ஹனுமனது தாடை வீங்கியது. ஹனு என்றால் கீழ் தாடை என்ற பொருள் மான் என்றால் அடிப்பது என்று பொருள். இதன் காரணமாகவே ஹனுமன் என்ற பெயர் வந்தது.


ஆனால் வாயு பகவன் தனது அருளால் பிறந்த   ஹனுமனுக்கு நிகழ்ந்ததைக் கண்டு கோபமுற்றான். உடனே தனது இயக்கத்தை நிறுத்தினான். இந்த பிரபஞ்சமே மூச்சு விடமுடியாமல் திணறியது. அனைத்து கடவுள்களும் மூச்சுத் தினறலின் விளிம்பில் இருந்தனர்.  பிறகு என்ன நடந்தது?

 

 

தொடரும்

No comments: