Friday, February 13, 2026

 


சிவராத்திரி



எதிர் வரும் ஞாயிறன்று சிவராத்திரி  அதைப் பற்றி இணையத்தில் கிடைத்த ஒரு சில குறிப்புகள்.

 

தோற்றுவித்தலைப் படைப்புத் தொழில் வடிவில் செய்யும் பிரம்மனுக்கும், நிலைப்படுத்தலைக் காத்தல் தொழில் வடிவில் செய்யும் திருமாலுக்கும் தம்முள் யார் பெரியவர் என்ற சண்டை எற்பட்டபோழுது சிவன் நீள் ஒளியாக அவர்கள் நடுவில் தோன்றினார். யார் தனது அடியையும் முடியையும் காண்கின்றார்களோ அவர்களே பெரியவர் எனவும் அறிவித்தார். பிரம்மா அன்ன வாகனத்தில் ஆகாயத்தில் முடி தேடி புறப்பட்டார். திருமால் வராகப் பன்றி உருவில் நிலத்தைத் துளைத்துச் சென்று அடிதேடலானர். அந்நேரம் வானத்தில் மிதந்து வந்து தாழம் மலரை பிரம்மா அது சிவனின் தலையில் இருந்தது என்று பொய் சொல்லச் சொன்னார்/ தானும் சிவனின் முடியைக் கண்டதாகப் பொய்யுரைத்தார்.  இதனால் கோபம் கொண்ட சிவன் பிரம்மாவுக்கு உலகில் கோவில் இல்லாது போகவும் அவருக்குத் துணை நின்ற தாழம் மலரை அர்ச்சனை மலர்களில் இருந்து விலக்கவும் செய்தார். சிவனும் பிரம்மாவும் தமக்குள் யார் பெரியவர் என்ற ஆணவத்திற்கு சிவனிடம் மன்னிப்புக் கோரி நீள் ஒளியாக நின்ற பரம்பொருளை வழிபடு பொருளாக நின்றருள வேண்டினர்.

 

அந்த நீள் ஒளி குளிர்ச்சி பெற்று அருணாசலம் என்னும் மலையாக மாறியது. அதுவே இன்றைய திருவண்ணாமலை

 

உன்னாமுலையார் உடனுறை அண்ணாமலையார் திருவண்ணாமலை மூர்த்தி மேலும் நீள் ஒளியாக   - நின்ற இறைவன்  சிதம்பரத்தில்  லிங்க உருவில் சிவமாகக் காட்சி அளித்து அருள் செய்ததும் இதனையே லிங்க உற்பத்தி என்று நள்ளிரவில் வணங்குகின்றனர்.

 

மேலும் பாற்கடலைத் தேவர்களும் அசுரர்களும் வாசுகியை மத்தாகக் கொண்டு கடைந்த பொழுது தோன்றிய ஆலகால விஷத்தைச் சிவன் உண்ட இரவு என்று ஒரு மரபினர் சொல்கின்றனர்.

 

மேலும் சக்தி  தவமிருந்து இறைவனில் சமபங்கு பெற்று இறைவனை அர்த்த நாரீஸ்வரராகக் காட்சியளிக்க வைத்த இரவு என்றும் ஒரு சாரார் தெரிவிக்கின்றனர்.

 

சக்தி மகாப்ரளய முடிவில் அனைத்தும் சிவனில் ஒடுங்கி இருந்த நேரத்தில் உயிர்களையும் உலகையும் மீளவும் தோற்றுவிக்கும்படி  சிவனை வழிபட்டதினால் சக்தியின் வேண்டுதலுக்கு அமைய உயிர்களையும் உலகையும் சிவன் தோற்றுவித்தார் என்பது இன்னொரு மரபு..அவ்வாறே மதுரையில் சிவராத்திரி அன்று  இரவு தான் ராஜசேகர பாண்டியனின் வேண்டுகோளுக்கு இணங்க நடராஜர் வலது காலை உயர்த்தி இடது காலை தரையில் வைத்து ஆடியதும் ஒரு சிவராத்திரி இரவு என்று ஒரு மரபினர் சொல்கின்றனர்.

 

அர்ஜுனன் தவம் செய்து சிவனிடம் பாசுபத ஆயுதம் பெற்றதும் சிவராத்திரி அன்று என்று கூறப்படுகிறது.

 

சிவராத்திரி அன்றுதான் சிவபிரான் கண்ணப்ப நாயானாருக்கு கண்கள் கொடுத்து அருளினார் என்றும் சொல்லப்படுகிறது.

 

பகீரதன் ஒற்றைக் காலில் தவமிருந்து கங்கையைப் பூமிக்கு வரவழைத்த நாளும் சிவராத்திரி அன்று தான் என்றும் சொல்லப்படுகிறது.. கங்கையின் வேகத்தால் பூமி அழியாமல் பாதுகாக்க இறைவன் தனது ஜடாமுடியை விரித்து கங்கையைத் தனது தலையில் தாங்கியதும் சிவராத்திரி அன்று தான் என்று சொல்லப்படுகிறது.

 

மார்கண்டேயனுக்காக சிவ பெருமான் யமனைத் தண்டித்ததும் சிவரத்திரி அன்று தான் என்று சொல்கின்றனர்.

 

இப்போது தெரிகிறதா சிவராத்திரி எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததென்று?

  

நாளை பார்ப்போம் சிவாலய ஓட்டம்.

No comments: