Tuesday, February 17, 2026

 



 

துளசிதாசரின்

கிஷ்கிந்தா காண்டம்.

ஓர் ஆய்வு 

 

பதிவு எண் 25

 

நேற்றைய தொடர்ச்சி

 

ஹனுமனுக்கு கிடைத்த அஷ்டமா சித்திகளைப் பற்றி தனித்தனியாகத் தெரிந்து கொள்வோமா?

 

ஹனுமனும் அஷ்டமாசித்திகளும்


பிரம்மாவே இவரின் அருமைபுரிந்து அஷ்டமாசித்திகளையும் அருளினார். இவரிடமிருந்த அஷ்டமா சித்திகள் என்னவென்று பார்ப்போமா?. அஷ்டமாசித்திகள் என்பது எட்டு வகையான சித்திகளைக் குறிக்கும்.

  

அனிமா अणिमा

 

அணுமாதிரி மிகச் சிறியதாக மாறுவது. கிட்டத்தட்ட ஆலவிதைக்குள் ஒளிந்திருக்கும் ஆலமரம்போல ஒரு அணுவளவு உயிரையும், உடலையும் சுருக்கிக் கொள்வது. பிருங்கி முனிவர் முத்தேவர்களை மட்டும் வலம் வருவதற்காகச் சிறு வண்டாக உருமாறினார்

 

மகிமா,

 

இருப்பதிலேயே மிகப் பெரிய உருவமாவது. மலையின் எதிரே நின்று மலையைவிட பெரிதாக மாறுவது. வாமன அவதாரத்தில் திருமால் இரண்டடியால் மூவுலகை அளந்ததும், கிருஷ்ண பரமாத்மா அர்ஜூனனுக்கு விஸ்வ ரூப தரிசனம் காட்டி உலகமே தன்னுள் அடக்கம் என்று காட்டியதும் மஹிமா என்னும் சித்தாகும்

 

கரிமா,

 

எடுத்த உருவத்தை கனத்துப்போகச் செய்வது. மலையை பெயர்க்க வேண்டுமெனில் மலையின் கனத்த சக்தியின் அளவை, தன் உடலுக்குள் ஏற்றுக்கொள்வது. அமர்நீதி நாயனாரிடம் கோவணம் பெறுவதற்காக இறைவன் வந்தபோது, ஒரு கோவணத்தின் எடைக்கு தன்னிடமுள்ள எல்லா பொருட்களை வைத்தும் தராசுத் தட்டு சரியாகாமல் கடைசியாக தானும் தன் மனைவியும் ஏறி அமர்ந்து சரி செய்த சித்தி

 

லகிமா

 

லேசாக தன் உடலை மாற்றிக் கொள்வது. திருநாவுக்கரசரை சமயப் பகை காரணமாக கல்லில் கட்டி கடலில் போட்டபோது கல் மிதவையாகி கடலில் மிதந்தது லஹிமா ஆகும்

 

பிராப்தி  

 

எங்கு வேண்டுமானாலும் உடனே சென்றடையும் சக்தி திருவிளையாடற்புராணத்தில் "எல்லாம்வல்ல சித்தரான படலம்" என்னும் பகுதியில் சிவன் ஒரே சமயத்தில் நான்கு திசைகளிலும் காட்சியளித்ததாக வரும் சித்தி

 


தொடரும்

No comments: