துளசிதாசரின்
கிஷ்கிந்தா காண்டம்.
ஓர் ஆய்வு
பதிவு எண் 13
நேற்றைய தொடர்ச்சி
இங்கு ஒரு கேள்வி எழலாம் . கிஷ்கிந்தா காண்டத்தில் காசிக்கு என்ன வேலை? இரண்டிற்கும் இடையே வெளிப்படையான தொடர்பு இல்லை. காசி என்பது ஒரு நபருக்கு முக்தி வழங்குவது போன்ற ஆன்மீகத் தகுதியை வழங்கும் ஏழு புனிதத் தளங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது., அந்தப் பட்டியலில் காசி நாலாவது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் அயோத்தி உள்ளது. கிஷ்கிந்தா காண்டம் இராமாயணத்தில் நான்காவது இடம் என்பதலால் புனிதத்துவம் மற்றும் முக்கியத்துவத்தின் அடிப்படையில் காசி அதே நாலாவாது இடத்தில் வைக்கப்பட்டுள்ளது. அந்த ஏழு புனிதத் தளங்களாவன
1.அயோத்தி. 2.மதுரா. 3, மாயாபுரி 4, காசி 5. காஞ்சி 6. அவந்திக 7. பூரி
இதில் மாயாபுரி ஹரித்வாரைக் குறிக்கும். அவந்திகா என்பது உஜ்ஜைனைக் குறிக்கும்.. ஆயினும் துளசிதாசர் சிவனைத் துதிக்கும்போது அவனது உறைவிடமான காசியையும் வணங்குகிறார்.
இனி துளசிதாசரைத் தொடர்வோம்
சர்கம் 2
இராமன் ஹனுமன் சந்திப்பு
இராகவனும் இலக்ஷ்மணனும் கிஷ்கிந்தாவில் உள்ள ரிஷ்யமுக மலையை நோக்கி முன்னேறிச் செல்கிறனர்.
===========
आगें चले बहुरि रघुराया। रिष्यमूक पर्बत निअराया॥
तहँ रह सचिव सहित सुग्रीवा। आवत देखि अतुल बल सींवा॥1
अति सभीत कह सुनु हनुमाना। पुरुष जुगल बल रूप निधाना॥
धरि बटु रूप देखु तैं जाई। कहेसु जानि जियँ सयन बुझाई॥2
=============
இப்போது அந்தப் பகுதி, வாலிக்குப் பயந்து சுக்ரீவன் தனது அமைச்சர்களுடன் மறைந்து வாழும் இடம். இங்கு துளசி தாசர் सचिव सहित என்று கூறுகிறார். பொதுவாக ஒரு அரசன் என்பவன் ஏழு அங்கங்களை உடையவன், அரசன், அமைச்சர், நண்பர், செல்வம், தேசம், கோட்டை மற்றும் சேனை. இதைப் பற்றி துளசி தாசர் அயோத்யா காண்டத்தில் தெளிவாகக் கூறி உள்ளார்
=============
सचिव सत्य श्रद्धा प्रिय नारी। माधव सरिस मीतु हितकारी॥
चारि पदारथ भरा भँडारू। पुन्य प्रदेस देस अति चारू॥
छेत्रु अगम गढ़ु गाढ़ सुहावा। सपनेहुँ नहिं प्रतिपच्छिन्ह पावा॥
सेन सकल तीरथ बर बीरा। कलुष अनीक दलन रनधीरा॥
============
சுக்ரீவனிடம் வெறும் இரண்டு அங்கங்கள் மட்டுமே மீதி இருந்தது. வாலி அவனை கிஷ்கிந்தையை விட்டுத் துரத்தி விட்டான், ஆனால் இன்னும் அவன் அரசனே. அவனிடம் நான்கு மந்திரிகள் இருந்தனர். ஆனால் அவர்களில் அவன் ஹனுமனைத்தான் மிகவும் நம்பினான். காரணம் ஹனுமன் தான் எல்லா வேலைகளையும் திறம்பட முடித்துக் கொடுப்பதில் வல்லவன் என்று அனுபவத்தில் சுக்ரீவன் அறிந்திருந்தான். ஹனுமன் ஒரு விதிவிலக்கான புத்திசாலி. எந்தவித அறிவுறுத்தல்களும் இல்லாமல் பிரச்சனைகளை அந்த இடத்திலேயே சமாளித்து தீர்க்கவும் செய்வார். ஹனுமன் நம்பகமாவனவர்; நேர்மையானவர்; உண்மையுள்ளவர்; எதற்கும் அஞ்சாதவர்; அச்சமற்றவர்; விவேகமுள்ளவர்; எந்தவித பாதகமான சூழ்நிலையும் எதிர்கொள்ளும் துணிச்சலானவர்; இந்த விஷயத்தில் ஹனுமனுடன் யாரையும் ஒப்பிடமுடியாது என்பதை சுக்ரீவன் அறிந்திருந்தான்.
தொடரும்
No comments:
Post a Comment