Wednesday, February 11, 2026

 




காலை வணக்கம்

 


 

துளசிதாசரின்

கிஷ்கிந்தா காண்டம்.

ஓர் ஆய்வு 

பதிவு எண் 20

 

நேற்றைய தொடர்ச்சி

 

துளசிதாசரும் தனது ஹனுமான் சாலிசா வில் ஹனுமான் சிவனின் ஒளி பொருந்திய அவதாரம் என்று குறிப்பிடுகிறார்.

 

शंकर सुवन केसरी नंदन, तेज प्रताप महा जग वंदन

 

ஸ்கந்த புராணத்தின் எட்டாவது அத்யாயத்தில் ஹனுமனை நந்தி பகவானின் அவதாரம் என்று கூறப்பட்டுள்ளது. நந்தியும் சிவனின் ஒரு அம்சம்தானே..

 

============ 

"हरिणा प्रार्थितो नन्दी रामकार्यचिकीर्षया।

हनूमन्तं हरिरूपं ससर्ज कपिकुञ्जरम्॥"

=============

  

மும்மூர்த்திகளில் மூன்று கடவுள்கள் உள்ளனர். அதாவது பிரம்மா படைப்பாளர். விஷ்ணு படைப்பைப் பேணுபவர் மற்றும் பாதுகாவலர். அதை நேரம் வரும்போது முடிவுக்கு கொண்டுவருபவர் சிவ பெருமான். இராமாயணக் கதையில் விஷ்ணு அயோத்தி அரசின் இளவரசன் இராமனாக அவதாரம் எடுத்தார். பிரம்மா கரடிகளின் சமூகத்தின் வயதான புத்திசாலியான தலைவன் ஜாம்பவனாக அவதாரம் எடுத்தார். கிஷ்கிந்தாவில் சிவபெருமான் ஹனுமனாக அவதாரம் எடுத்தார். அவர் இராமனின் தீவிரமான மற்றும் உண்மையுள்ள பக்தர் மற்றும் சுக்ரீவனின் தலைமை ஆலோசகர்களில் ஒருவர் அதாவது சிவபெருமான் இராமனுக்குச் சேவை செய்யவேண்டிய நேரம் வந்தபோது அந்த வாய்ப்பை இழக்க விரும்பாமல் ஹனுமனாக பூமியில் அவதரித்தார்.

 

தனது அன்பான இறைவனுக்கு உதவியாக இருப்பதற்கும், அவருக்கு விடாமுயற்சியுடன் சேவை செய்வதற்கும் ஒரு வாய்ப்பு, மற்றும் இந்த பணியில், இராமனுக்கு முழு பாதுகாப்பை வழங்க வேண்டிய அவசியம் ஏற்பட்டால் அதற்காகவும் ஹனுமனாக அவதரித்தார் சிவ பெருமான்.  சுக்ரீவனுக்கும் இராமனுக்கும் இடையே நட்பு மலர காரமானவின். சீதையத் தேடுவதின் முதல் படி இது உண்மையில் ஹனுமன் தான் அசுர மன்னனால் கடத்தப்பட்ட இராமனின் மனைவி சீதையை இலங்கைச் சிறையில் கண்டுபிடித்தவன். இராமன் உங்களை மீட்பார் என்ற நம்பிக்கை சீதைக்கு அளித்தவன் ஹனுமான். இலங்கையை எரித்து இராமனுக்கு எச்சரிக்கை விடுத்தவன். கிஷ்கிந்தையின் குரங்குகள் மற்றும் கரடிகளைக் கொண்ட வானரப் படைகள் இராவணனின் படைகளுடன் போரிட்ட போது அதில் வெற்றி கிடைத்திட முக்கிய பங்கு ஆற்றியவன் ஹனுமன்.. “எனக்கு இராமன் தான் எல்லாம்” என்ற மனநிலை.தாச்ய பக்தியின் (சேவை பக்தி) சிறந்த உதாரணம் ஹனுமன்..

 

அதனால் தான் இந்திய பாரம்பரியத்தில், “பலமும் புத்தியும் வேண்டுமானால் ஹனுமனை நினை” என்று கூறுவர்.

 

 

தொடரும்

No comments: