Tuesday, February 10, 2026

 


 

துளசிதாசரின்

கிஷ்கிந்தா காண்டம்.

ஓர் ஆய்வு


பதிவு எண் 19

நேற்றைய தொடர்ச்சி

ஹனுமான் அவதாரம் பற்றிய மற்றொரு கதை


புஞ்சிகாஸ்தலா என்ற ஒரு அப்சரஸ் குஞ்ஜர் என்ற குரங்கின் மகளாகப் பிறந்தாள். அவள் பெயர் அஞ்சனா., அவள் கேசரியை மணந்தாள். ஒரு நாள் அஞ்சனா ஒரு மனிதப் பெண் வடிவத்தை எடுத்தாள்., தன்னை அலங்காரங்களாலும், சிறந்த மலர் மாலைகளாலும் அலங்கரித்துக் கொண்டாள், சுற்றிலும் பரவியிருந்த இயற்கையின் அழகை ரசிக்க ஒரு மலையின் உச்சிக்குச் சென்றாள். அவளுடைய மயக்கும் அழகு காற்றுக் கடவுளின் கவனத்தை ஈர்த்தது, அவர் அவளைத் தழுவினார். (அவளைச் சுற்றிலும் சுழன்ற ஒரு மென்மையான, இனிமையான மற்றும் மணம் மிக்க காற்றின் வடிவத்தில், அவளை எல்லா பக்கங்களிலிருந்தும் சூழ்ந்து கொண்டார்).

இந்த அணைப்பின் விளைவாக, அஞ்சனா ஒரு மகனைப் பெற்றெடுத்தாள். காற்றுக் கடவுளின் அனைத்து சிறந்த நற்பண்புகளையும் கொண்டிருந்ததது அந்தக் குழந்தை.: அற்புதமான சக்திகளைக் கொண்டிருந்தது. அபார வலிமை, வீரம் மற்றும் துணிச்சல், புத்திசாலித்தனம் நல்ல ஞானம் கொண்டிருந்தது. அந்தக் குழந்தைக்கு இணையாக வேறு எவரும் இல்லை., தெய்வீக ஒளியைப் போல அதனிடமிருந்து பிரகாசம் வெளிப்பட்டது, அக்குழந்தை மகிமை மற்றும் சிறப்பின் உருவகப்படுத்தப்பட்ட வடிவம். அதனால் தான் அவரை வாயு புத்திரன் என்று அழைக்கின்றனர்.

பல புராணங்கள் ஹனுமனைச் சிவபெருமானின் வெளிப்பாடு (manifestation) என்று சொல்கின்றன. அதாவது ஹனுமன் ருத்ரனின் அம்சமாகப் பார்க்கப்படுகிறார். இதற்கான கதைதான் மேலே சொல்லப்பட்டுள்ளது. சிவமகா புராணத்தில் இதை சற்று வித்தியாசமாகச் சொல்லி உள்ளனர்.

===============================

एकस्मिन्समये शम्भुरद्भुतोतिकरः प्रभुः। ददर्श मोहिनीरूपं विष्णोः स हि वसद्गुणः॥ ३॥

चक्रे स्वं क्षुभितं शम्भुः कामबाणहतो यथा। स्वं वीर्यमपातयामास रामकार्यार्थमीश्वरः॥ ४॥

तद्वीर्यं स्थापयामासुः पत्रे सप्तर्षयश्च ते। प्रेरिता मनसा तेन रामकार्यार्थमादरात्॥ ५॥

तैर्गौतमसुतायां तद्वीर्यं शम्भोर्महर्षिभिः। कर्णद्वारा तथाञ्जन्यां रामकार्यार्थमाहितम्॥

================================

அதாவது நந்தி பகவான் ராமபிரானுக்கு எந்தெந்த வழிகளில் சிவபெருமான் உதவினார் என்று இந்த நிகழ்வைச் சொல்கிறார்.. இது சிவபுராணத்தில் உள்ளது. அதாவது ஹனுமனின் தாயாரான அஞ்சனா தேவி தனக்கு சிவனைப் போன்ற புதல்வன் வேண்டும் சிவனை நோக்கி தவம் செய்ய சிவனும் அகமகிழ்ந்து தனது பதினோராவது ஸ்வரூபமான ருத்ர அவதாரமாக பிள்ளை பிறப்பான் என்று வரமளிக்கிறார்.

ஒரு நாள் சிவபெருமான் விஷ்ணுவின் மோகினி அவதாரத்தில் மயங்கி நிற்கிறார். மன்மதன் அம்புகளை எய்ய காமவயப்பட்ட சிவன் தனது வீரியத்தை (விந்தை) வெளியிட (அதாவது இராவணனைக் கொல்லும் முயற்சியில் இராமனுக்கு உதவுவதற்காக அதைச் செய்ய) இதை அறிந்த ஏழு முனிவர்கள் அதை ஒரு இலையில் ஏந்தி கௌதம முனிவரின் மகளான அஞ்சனா தேவியின் காதின் மூலம் உள்ளே செலுத்தினர்.. உரிய நேரம் வந்ததும் ருத்ர ஸ்வரூபத்துடன் சிவபெருமான் வானர உடலுடன் ஹனுமனாக அவதரித்தார்.



தொடரும்

No comments: