Tuesday, June 2, 2026

 


 

 

 

துளசிதாசரின்

கிஷ்கிந்தா காண்டம்.

ஓர் ஆய்வு 

 

பதிவு எண் 117

 


நேற்றைய தொடர்ச்சி

 


கையை விட்டுப் போன அயோத்தி, வனவாசம், சீதையின் இழப்பு இப்படி மலை போன்ற துன்பங்களை உடைய இராமன் அவைகளை மறந்து சுக்ரீவனுக்கு உதவி செய்ய முன்வருகிறான். 

 

இராமன் தனது துன்பங்களை மறந்து சுக்ரீவனின் சிந்தனையில் ஆழ்ந்துவிட்டான் என்கிறார் துளசிதாசர்.

  


=====

सखा सोच त्यागहु बल मोरें।

सब बिधि घटब काज मैं तोरें॥

=====

 

जिन्ह कें असि मति सहज न आई। ते सठ कत हठि करत मिताई॥

कुपथ निवारि सुपंथ चलावा। गुन प्रगटै अवगुनन्हि दुरावा॥2

 


“எவனிடம் இயற்கையிலேயே இப்படிப்பட்ட குணம் இல்லையோ அப்படிப்பட்ட மூடன் எதற்காக ஒருவனிடம் வலிந்து  நட்பை ஏற்படுத்திக் கொள்ளவேண்டும் ? தீய வழியில் செல்லும் நண்பனைத் திருத்தி நல்ல வழியில் அழைத்துச் செல்வதுதான் நண்பனின் கடமை. மேலும் நண்பனின் குறைகளை மிகைப்படுத்தாமல்  அவனது குணங்களை வெளிப்படுத்துவது உண்மையான நண்பனுக்கு இலக்கணமாகும்./

 


பர்த்ருஹரி தனது சுபாஷிதத்தில் நட்பின் இலக்கணங்களைக் கூறுகிறார்

 


==========

पापान्निवारयति योजयते हिताय
गुह्यं निगूहति गुणान् प्रकटीकरोति।
आपद्गतं च न जहाति ददाति काले
सन्मित्रलक्षणमिदं प्रवदन्ति सन्तः॥

===============


"தீய செயல்களைத் தடுக்கின்றான், நன்மைக்காக உந்துகின்றான், இரகசியங்களை பாதுகாக்கின்றான், நல்ல பண்புகளைப் புகழுகின்றான், சிக்கலில் விட்டுவிடாமல் துணை நிற்கின்றான், தேவையான நேரத்தில் உதவுகின்றான் — இதுவே ஒரு உண்மையான நண்பனின் லட்சணம் எனச் சான்றோர் கூறுகின்றனர்."


தீயதைத் தடுத்து நலன்கொடு சொல்வான்

தீமை செய் போது திருத்திடும் சொல்வான்

உண்மையை உள்ளே உறுதியாக் காப்பான்

உலகம் அறிய நன்மையைப் புகழ்வான்!


---------------------

 

அவனுக்கே ஆபத்து வந்திடும் நேரம்

அழகாய் நம் தோளில் அழுத்தமாய் சேரும்

நேரத்தில் நம்மை நினைத்தே உதவும்

நேசத்தின் தீபம் நெஞ்சத்தில் எரியும்!


-----------------------

 

இவனே நண்பன்! இதுவே நட்பு!

இறைவனின் சாயல் இதுவே சத்தியம்!

பாசத்தின் பாதை பயணிக்கும் போது

பாரதி சொல்வது — இதுவே நெறி!



 

தொடரும்

No comments: