Tuesday, June 9, 2026

 

 

 

துளசிதாசரின்

கிஷ்கிந்தா காண்டம்.

ஓர் ஆய்வு

 

 

பதிவு எண் 121

 

நேற்றைய தொடர்ச்சி

  

 

சுக்ரீவனின் சந்தேகம்

  

-'सखा सोच तोरे' என்று சொல்வதன் மூலம் இராமன் சுக்ரீவனிடம் எனது புஜபலத்தின் மீது நம்பிக்கை வைத்து உனது கவலையை விடு. நான் உனக்கு எல்லா வகைகளிலும் உதவி  செய்வேன் என்று ஆறுதலளித்தான்.  இங்குதான் சுக்ரீவனுக்குச் சந்தேகம் வருகிறது. இவர் வாலியின் பலத்தை அறியாமல் அவனைக் கொல்வேன் என்று வாக்களித்துள்ளாரே? இவரை எப்படி நம்புவது என்று குழப்பத்தில் ஆழ்ந்தான்.

 

* कह सुग्रीव सुनहु रघुबीरा। बालि महाबल अति रनधीरा॥

दुंदुभि अस्थि ताल देखराए। बिनु प्रयास रघुनाथ ढहाए॥6

 

அதைக் கேட்ட சுக்ரீவன் “இரகுநாதரே! வாலியைச் சாதரணமாக எண்ணி விடாதீர்கள் அவன் மிகவும் வலிமை உடையவன்; களத்தில் நிலைத்து நிற்க்கக் கூடிய போர் வீரன்; “ என்றான். பிறகு அவன்  துந்துபி அரக்கனின் எலும்பு மலையையும், ஏழு மராமரங்களையும் இராமனுக்குக் காண்பித்து “இந்த மலையை ஒரே உதையால் சாய்த்துத் தள்ளக் கூடியவரும், இந்த ஏழு மராமரங்களையும் ஒரே அம்பால்  துளைக்க வல்லவரும் தான் வாலியை வெல்ல முடியும்” என்று கூறினான்.

 

வால்மீகி இராமாயணத்தில் வாலி துந்துபியின் உடலை ஒரு யோசனை தூரம் தூக்கி எறிந்தான் चिक्षेप वेगवान्वाली वेगेनैकेन योजनम्  என்றும் ஆனால் இப்போது அவனது எலும்புக் கூட்டைக் கூட யாராலும் தூக்க முடியாது என்றும் அதுபோல அங்கிருந்த ஏழு மரங்களை உலுக்கி அவைகளை இலைகள் அற்றவையாக ஆக்கிவிடுவான் என்றும் அந்த எலும்புக் கூட்டை அசைத்தாலோ அந்த மரங்களில் ஏதாவது ஒன்றையாவது பாணத்தினால் துளைத்தால் தங்களால் வாலியைக் கொல்ல முடியும் என்று நான் நம்புவேன் என்றான்,

 

தொடரும்


No comments: