துளசிதாசரின்
கிஷ்கிந்தா
காண்டம்.
ஓர் ஆய்வு
பதிவு எண் 124
நேற்றைய தொடர்ச்சி
இராமனைப் புகழும் சுக்ரீவன்
देखि अमित बल बाढ़ी प्रीती। बालि बधब इन्ह भइ परतीती॥
இராமனின் வலிமையைக் கண்டதும் சுக்ரீவனின் மனதில் இராமனிடம் மேலும் அன்பு அதிகரித்தது. அவர்
வாலியை நிச்சயம் வதம் செய்து விடுவார் என்ற நம்பிக்கை அவனுக்குத் தோன்றியது.
இங்கு देखि अमित बल” என்கிற பதப்
பிரயோகம் செய்கிறார் துளசிதாசர்.. இலக்ஷ்மணன் தாடகை, கர தூஷண, மாரீசன், விராதன்
கபந்தன் ஆகியோர் இராமனின் மூலமாக கொல்லப்பட்ட வீர வரலாற்றை சொல்லக்
கேட்டிருக்கிறான் சுக்ரீவன் लछिगमन रामचारित सब भ्राषा। பிறகு இராமன் தனது
வாயால் தனது பலத்தைப் பற்றிச் சொல்வதையும் கேட்டுள்ளான். सुनु सुग्रीव मारिहों
बालिहि एकाहि बान। ब्रह्म रुद्र सरनागत गए न उबारिहि प्रान. ஆனாலும் அவன் மனதில் ஒரு திருப்தி ஏற்படவில்லை. ஆனால் எப்பொழுது
இராமன் துந்துபியின் சடலத்தை பத்து யோசனை தூரம், கால் கட்டை விரலால் எந்தவித சிரமும் இல்லாமல் வீசினானோ, எப்பொழுது
ஏழு சால மரங்களையும் தனது ஒரே பாணத்தால் துளைத்தானோ, அப்பொழுது சுக்ரீவன் இராமனின்
பலத்தை நோக்கினான். அவன் இராமனைப் புகழ்ந்து பேசுவதை வால்மீகி
இவ்வாறு தெரிவிக்கிறார்.
स इन्द्रान् अपि सुरान् सर्वाम् त्वम् बाणैः पुरुषर्षभ |
समर्थः समरे हन्तुम् किम् पुनर् वालिनम् प्रभो || ४-१२-८
येन सप्त महा साला गिरिर् भूमिः च दारिताः |
बाणेन एकेन काकुत्स्थ स्थाता ते को रण अग्रतः || ४-१२-९
अद्य मे विगतः शोकः प्रीतिर् अद्य परा मम |
सुहृदम् त्वाम् समासाद्य महेन्द्र वरुणोपमम् || ४-१२-१०
சுக்ரீவன்
இராமனிடம்:
"நீ
தேவர்களையே வெல்லக்கூடியவன்.
ஒரே அம்பால் ஏழு
சால மரங்களையும் மலையையும் பூமியையும் துளைத்தவன்.
ஆகவே வாலி
உனக்கு ஒரு பொருட்டல்ல.
உன்னை
நண்பனாகப் பெற்றதால் என் துயரம் இன்று நீங்கிவிட்டது."
என்று முழு
நம்பிக்கையுடன் கூறுகிறான்.
இந்தச்
சுலோகங்கள் சுக்ரீவனின் சந்தேகத்திலிருந்து நம்பிக்கைக்கான மாற்றத்தை மிகவும்
அழகாக வெளிப்படுத்துகின்றன. வாலியை வெல்ல இராமனால் முடியுமா என்ற ஐயம், இங்கு
முழுமையான பக்தி மற்றும் நம்பிக்கையாக மாறுகிறது.
இதற்கு முன் வாலியை மகா பலசாலி बालि महाबल अति रनधीरा। என்று
சொன்னவன் இப்பொழுது இராமனை அதிபலசாலி अमित बल என்று அழைக்கிறான்.
இப்பொழுது இராமன் மீது இன்னும் மரியாதையும்
அன்பும் ஏற்படுகிறது.
தொடரும்
No comments:
Post a Comment