Wednesday, June 3, 2026

 


துளசிதாசரின்

கிஷ்கிந்தா காண்டம்.

ஓர் ஆய்வு 

 

பதிவு எண் 118 



நேற்றைய தொடர்ச்சி

 

 

துளசிதாசர் நட்பு பற்றி மேலும் சொல்கிறார்.



* देत लेत मन संक न धरई। बल अनुमान सदा हित करई॥

बिपति काल कर सतगुन नेहा। श्रुति कह संत मित्र गुन एहा॥3॥

 


“நண்பர்களிடையே கொடுக்கல் வாங்கல் செய்யும்பொழுது திரும்பி வருமா வராதா என்ற ஐயம் மனதில் கொள்ளக்கூடாது. தன்னுடையே சக்திக்கு ஏற்ப எப்பொழுதும் நண்பனுக்கு உதவி செய்து கொண்டே இருக்கவேண்டும் குறிப்பாக  நண்பனுக்கு இன்னல்கள் ஏற்படும்பொழுது நூறு மடங்கு அன்பைக் காட்ட வேண்டும். வேதங்களும், நீதி நூல்களும் இவைதான் உண்மையான நண்பனுக்கு இலக்கணங்கள் என்று கூறுகின்றன”

 

 

இங்கு துளசிதாசர் देत लेत என்று கொடுப்பதற்குத்தான் முன்னுரிமை அளிக்கிறார். முதலில் கொடு அப்புறம் பெற்றுக் கொள் என்று சொல்கிறார்.  அடுத்து बल अनुमान அதாவது சக்தியின் மதிப்பீடு .அதவாது சக்திக்குத் தகுந்து கொடுத்தல்.அதாவது  இந்த பலம் அல்லது வலிமை என்றால் என்ன?

 

மகாபாரதத்தில் உத்யோகபர்வத்தில் இவ்வாறு சொல்லப்பட்டுள்ளது


बलं पञ्चविधं नित्यं पुरुषाणां निबोध मे ।

यत्तु बाहुबलं नाम कनिष्ठं बलमुच्यते ।।48।।

अमात्यलाभो भद्रं ते द्वितीयं बलमुच्यते ।

धनलाभस्तृतीयं तु बलमाहुर्जिगीषवः ।।49।।

यत्त्वस्य सहजं राजन्पितृपैतामहं बलम् ।

अभिजातबलं नाम तच्चतुर्थं बलं स्मृतम् ।।50।।

येन त्वेतानि सर्वाणि सङ्गृहीतानि भारत ।

यद्बलानां बलं श्रेष्ठं तत्प्रज्ञाबलमुच्यते ।।51।।

महाभारत उद्योगपर्व – 37/48

 


 

அதாவது விதுரர் தருமரிடம் ஐந்துவிதமான பலம் அல்லது வலிமை பற்றிப் பேசுகிறார். அதில் “பாஹு பலம்” (உடல் வலிமை) மிகக் குறைந்த வலிமையாகக் கருதப்படுகிறது.

 

இரண்டாவது வலிமை — நல்ல அமைச்சர்களைப் பெறுதல்


மூன்றாவது வலிமை — செல்வம், பொருள், பணம்.

 

நான்காவது வலிமை — பிறப்பால் கிடைக்கும் வலிமை, அதாவது பித்ரு–பைதாமஹ பலம் (குலம், வம்சம், உயர்ந்த பிறப்பு). இது “அபிஜாத பலம்” எனப்படுகிறது.

 


ஐந்தாவது இந்த எல்லா வலிமைகளையும் ஒருங்கிணைத்து நடத்த வல்லது,

அனைத்திலும் சிறந்த வலிமை — ப்ரஜ்ஞா பலம் (அறிவு, புத்திசாலித்தனம், யோசனை).

 



தொடரும்

 

No comments: