Saturday, June 13, 2026

 


துளசிதாசரின்

கிஷ்கிந்தா காண்டம்.

ஓர் ஆய்வு

 

 

பதிவு எண் 125

 

நேற்றைய தொடர்ச்சி

 

 

சுக்ரீவன் இராமனின் வீரத்தைக் கண்டு அதிசயித்தான். இராமனால் வாலியைக் கொல்ல முடியும் என்ற நம்பிக்கை கொண்டான்.

  

बार-बार नावइ पद सीसा। प्रभुहि जानि मन हरष कपीसा॥7

उपजा ग्यान बचन तब बोला। नाथ कृपाँ मन भयउ अलोला

  

அவன் மீண்டும் மீண்டும் இராமனது திருவடிகளை வணங்கினான். பகவானை அடையாளம் கண்டு கொண்ட சுக்ரீவனின் மனம் மகிழ்ச்சியால் நிரம்பியது. “ஐயனே! எனக்கு அறிவு பிறந்தது. தங்களின் கிருபையால் என் மனம் ஒரு நிலைக்கு வந்தது.” என்றான்.  இறைவனை அடையாளம் கண்டுகொண்ட பிறகு அவனை மீண்டும் மீண்டும் வணங்குவது சிறப்பானது. பரவசத்தின் உச்ச நிலையைக் காட்டுகிறது.

 

 

वायुर्यमोऽग्निर्वरुणः शशाङ्कः प्रजापतिस्त्वं प्रपितामहश्च।

नमो नमस्तेऽस्तु सहस्रकृत्वः पुनश्च भूयोऽपि नमो नमस्ते।।11.39।।

 

இந்த பகவத்கீதையின் 11ஆம் அதிகாரம், "விஸ்வரூப தரிசன யோகம்" எனப்படும். இதில் அர்ஜுனன், ஸ்ரீகிருஷ்ணரின் ப்ரபஞ்ச வடிவத்தை (விஸ்வரூபம்) காணும் தருணத்தில், அவருடைய எல்லையற்ற தெய்வீகத் தன்மையை உணர்ந்து, ஆழ்ந்த பக்தியுடன் வணங்குகிறார்.

 

அர்ஜுனன் கூறுகிறான்: "நீயே வாயுவாகவும், யமனாகவும், அக்கினியாகவும், வருணனாகவும், சந்திரனாகவும், பிரஜாபதியாகவும், பிரம்மாவாகவும் இருக்கிறாய்.                 உன்னை  ஆயிரமடங்காக வணங்குகிறேன். மீண்டும் மீண்டும் வணங்குகிறேன்."

 

வாயுவாய் வீசுகிறாய்,
யமனாய் நீக்குகிறாய்,
அக்கினியாய் அழிக்கிறாய்,
வருணனாய் அருள்கிறாய்!

சந்திரனாய் சாந்தமாய்,
பிரஜாபதியாகப் படைக்கிறாய்,
பிதாமகராய் பூர்வம் நீ,
பரம்பொருளாய் பூரணமாய்!

ஓ! பரமா, நீயே அனைத்தும்,
அருவுருவாய், எல்லையில்லா ஆனந்தம்!
ஆயிரமடங்காக வணக்கம் உமக்கு,
மீண்டும் மீண்டும் வணக்கம் உமக்கு!

தொடரும்

 


No comments: