துளசிதாசரின்
கிஷ்கிந்தா
காண்டம்.
ஓர் ஆய்வு
பதிவு எண் 140
வாலியுடன் யுத்தம்
ले सुग्रीव संग என்ற பதத்தைப் போடுகிறார் துளசிதாசர். அதாவது சுக்ரீவனையும் அழைத்துக் கொண்டு.....
யார்? இராமன் சுக்ரீவனை அழைத்துக் கொண்டு
வாலியுடன் யுத்தத்திற்குப் புறப்பட்டான் என்கிறார். ஆக இங்கு இராமன்
முதலில் வருகிறான். பிறகு சுக்ரீவன். அதாவது சுக்ரீவன் முதலில் வாலி எனது எதிரி
அவன் கொlல்லப்படவேண்டியவன் என்று சொன்னவன்
பிறகு வாலி எனக்கு நன்மை செய்துள்ளான் என்று சொல்ல ஆரம்பித்து விடுவான். ஆனால்
இராமனுக்கு தான் கொடுத்த வாக்குறுதி நிறைவேற்றப் படவேண்டும் என்ற நிலைப்பாடு. ஆக இனியும் தாமதித்தால்
சுக்ரீவன் வாலி வதம் வேண்டாம் என்று சொல்லிவிடுவான் என்று கருதிச் சுக்ரீவனைக் கையோடு
அழைத்துக் கொண்டு கிஷ்கிந்தைக்குப்
புறப்பட்டுவிட்டான் என்று சொல்ல வருகிறார் துளசிதாசர். இரண்டாவது, நண்பனுக்குக்
கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவதில் முனைப்புடன் செயல் பட வேண்டும் என்று கருதித்
தன்னை முன்னிலைப் படுத்திக் கொண்டான் இராமன். பகவத் கீதையில் சொல்லியபடி
यद्यदाचरति श्रेष्ठस्तत्तदेवेतरो जनः ।
स यत्प्रमाणं कुरुते लोकस्तदनुवर्तते ॥21॥
இங்கு 'रघुनाथा” என்ற பதப் பிரயோகம்
செய்கிறார் துளசிதாசர். காரணம் ரகுவம்சத்தினர் அடைக்கலம் என்று வந்தவர்களைக்
கைவிடாதவர்கள். சத்யசந்தர்கள். உயிரே போனாலும் சொன்ன வாக்ககைக் காப்பாற்றுபவர்கள்.. இரகுகுலத்தின்
தலைவன் இராமன் ஆதலால் ரகுநாதன் என்று அழைக்கிறார்.. இங்கு ஒரு விஷயத்தைக்
கவனிக்கவேண்டும். சுக்ரீவனுடன் சென்றான் இராமன் என்று சொல்கிறார் துளசிதாசர்.
இலக்ஷ்மணனைப் பற்றிப் பேசவில்லை. காரணம் இராமன் ஒரே பாணத்தால் வாலியைக் கொல்வதாக
வாக்களித்துள்ளான்.
மகாபுருஷர்கள் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருப்பார்கள். அவர்கள்
செய்யும் செயல்களைப் பார்த்தே மற்றவர்கள் தாங்களும் அவர்களைப் பின்பற்றுவார்கள்.
தொடரும்..............
No comments:
Post a Comment