Tuesday, June 16, 2026

 

 

 

துளசிதாசரின்

கிஷ்கிந்தா காண்டம்.

ஓர் ஆய்வு

 

 

பதிவு எண் 129

 

நேற்றைய தொடர்ச்சி 

 

சுக்ரீவனின் ஞானம் நிறைந்த இந்த பேச்சை  அயோத்ய காண்டத்தில் இலக்ஷ்மணன் குகனிடம் பேசுவதோடு ஒப்பிடுகின்றனர் உரையாசிரியர்கள்

 

काहु कोउ सुख दुख कर दाता। निज कृत करम भोग सबु भ्राता॥2

 

யாரும் எவருக்கும் சுகத்தையோ துன்பத்தையோ கொடுப்பவர் அல்ல . அனைவரும் தாம் செய்யும் வினைப் பயன்களைத் தான் அனுபவிக்கிறார்கள்.

 

जोग बियोग भोग भल मंदा। हित अनहित मध्यम भ्रम फंदा॥

जनमु मरनु जहँ लगि जग जालू। संपति बिपति करमु अरु कालू॥3

 

சேர்க்கை, பிரிவு, நல்லவை, கேட்டவை, போகங்கள், நண்பர், பகைவர், இரண்டுமல்லாதார் இவை எல்லாமே பிரேமையினால் ஏற்பட்ட திரைகள். பிறவி, சாவு, செல்வம், ஆபத்து,  கருமம், காலம் என்றெல்லாம்  எங்கெல்லாமோ உலக மாயையை விரித்திருக்குதே

 

दरनि धामु धनु पुर परिवारू। सरगु नरकु जहँ लगि ब्यवहारू॥

देखिअ सुनिअ गुनिअ मन माहीं। मोह मूल परमारथु नाहीं॥4

 

“பூமி, வீடு, செல்வம்,, நகரம், சுற்றம், சுவர்க்கம், நரகம் என்றெல்லாம் உலகத்தில் கூறப்படுகின்றனவே, இவற்றை பார்க்கிறோமே, கேள்விப்படுகிறோமே,! ஆராய்ந்து பார்க்கிறோமே! இதற்கெல்லாம் காரணம் மதி மயக்கம்தான்.. அறியாமைதான். ஒன்றுமே உண்மையல்ல..

 

தொடரும்

 


No comments: