துளசிதாசரின்
கிஷ்கிந்தா
காண்டம்.
ஓர் ஆய்வு
பதிவு எண் 135
நேற்றைய தொடர்ச்சி..............
“अब प्रथु कृपा करहु एहि भाती: சுக்ரீவன் இராமனிடம்
எனக்கும் வாலிக்கும் உள்ள விரோதம் ஏதோ கனவில் வந்ததாகவே இருக்கட்டும்.. அதை மறந்து
உங்களையே எப்போதும் பூஜிக்கும் நிலையை நீங்கள் தந்தருளவேண்டும் என்று
சொல்லவருகிறான். தாங்கள் இந்த மாதிரி एहि भाँति க்ருபை செய்ய
வேண்டும் என்று சொல்கிறான்? எந்த மாதிரி? தாங்கள் முதலில் என்ன சொன்னீர்கள்? सखा सोच त्यागहु बल मोरें। सब बिधि घटब काज मैं तोरें॥5॥ சுக்ரீவா! நீ எனது
பலத்தின் மீது நம்பிக்கை வைத்து கவலையை விடு. உனக்கு எல்லாவிதத்திலும் உதவி
செய்கிறேன் என்று இராமன் சொன்னாரே அந்த மாதிரி கிருபை வேண்டாம். நான் எப்போதும்
உங்கள் நினைவிலேயே உங்களை பூஜித்து இருக்கவேண்டும் என்ற கிருபைதான் வேண்டும்
என்கிறான்.
மீண்டும் अब प्रथु कृपा करहु” என்பதை எடுத்துக் கொள்வோம். சுக்ரீவன்
சொல்கிறான் மாயை என்று திரை விலகியதும்
ஞானம் வந்துவிடும். ஆனால் அதற்கும் இராமனின் அருள் வேண்டும். ஆதலால் இராகவா! நான்
உன்னிடம் ஞானம், மோட்சம் கேட்கவில்லை. உன்னை மறவாது எப்போதும் உன்னை பூஜிக்கும்
நிலையே வேண்டும், அது கிடைத்தால் மோட்சம், ஞானம் எல்லாம் தானே கிடைத்துவிடும்.
भगति करत बिनु जतन प्रयासा। संसृति मूल अबिद्या नासा॥4॥
இறைவனை பக்தியோடு பூஜித்தால் உலகத்தின் அறியாமை, பிறப்பு, இறப்பு
போன்ற விலங்குகள் எந்தவித மந்திரமோ எந்திரமோ இன்றி தானே அழிந்து விடுகிறது.
राम भजत सोइ मुकुति गोसाईं। अनइच्छित आवइ बरिआईं॥2॥
துறவிகள், புராணங்கள், வேதங்கள் இவை அனைத்தும் பரமபதத்தின் அரிதான
வடிவங்கள் இராமன் மீது பக்தி செலுத்தி அவனை பூசிப்பதன் மூலம் எந்தவித முயற்சியும்
இன்றி இவை அனைத்துமே கிடைக்கும்
राम भजत सोइ मुकुति गोसाईं। अनइच्छित आवइ बरिआईं॥2॥
ஹரி பக்தி இல்லாமல் மோட்சம் அடைவது என்பது சாத்தியமே இல்லை.
தொடரும்..............
No comments:
Post a Comment