Monday, June 8, 2026

 


துளசிதாசரின்

கிஷ்கிந்தா காண்டம்.

ஓர் ஆய்வு

 

 

பதிவு எண் 120

 

நேற்றைய தொடர்ச்சி

 

இராமன் சுக்ரீவனிடம் சொல்வதின் தொடர்ச்சி.  

 

आगें कह मृदु बचन बनाई। पाछें अनहित मन कुटिलाई॥

जाकरिचत अहि गति सम भाई। अस कुमित्र परिहरेहिं भलाई॥4

परोक्षे कार्यहन्तारं प्रत्यक्षे प्रियवादिनम् ।

वर्जयेत् तादृशं मित्रं विषकुम्भं पयोमुखम् ॥

 

“எவன் நேரில் இனிக்க இனிக்க சிரித்துப் பேசிவிட்டு முதுகுக்குப் பின்னால் தீமை செய்கிறானோ, எவன் மனதில் கபடம் உடையவனாய் இருக்கிறானோ, அப்படிப்பட்டவனுடைய மனமானது பாம்பின் நடையைப் போல கோணல் மானலானது ஆகும் . எனவே சகோதரா! அப்படிப்பட்டவருடைய நட்பை விட்டு விலகுவதே நமக்கு நன்மை பயக்கும். எவன் நமக்கு முன் இனிக்கப் பேசிவிட்டு பின்னால்  கெடுதல் நினைக்கிறானோ அவன் ஒரு விஷம் நிறைந்த குடத்தைப் போல எது மேற்புறம் பாலாகத் தெரிகிறதோ அத்தகைய நண்பனை விக்கி வைக்கவேண்டும்.

 

 

முகமொடு இனிமை மொழியினும்  

உள்ளினில் தீங்கு மறைந்திடும்! 

விஷக் குடம் பால் முகம் போல  

அத்தகைய நட்பு அகற்றிடல் நன்று.

 

* सेवक सठ नृप कृपन कुनारी। कपटी मित्र सूल सम चारी॥

 

முட்டாளான வேலைக்காரன், கருமியான அரசன், நடத்தை கெட்ட பெண்மணி, கபடம் நிறைந்த நண்பன், ஆகிய இந்நால்வரும் சூலத்தைப் போல வேதனை தரக்கூடியவர்கள்.

 

இதே கருத்து பிரச்தாவ் ரத்னாகர் என்ற நூலில் சொல்லப்பட்டுள்ளது.

 

अविधेया भृत्यजना: शठानि

मित्राण्यदयायक: स्वामी। अविनयवती भार्या मस्तकशूलानि चत्वारि॥' (

 

சாணக்ய நீதியிலும் இதே கருத்து வலியுறுத்தப்பட்டுள்ளது

 

दुष्टा भार्या शठं मित्रं भृत्यश्चोत्तरदायकः ।

ससर्पे च गृहे वासो मृत्युरेव न संशयः ॥5ll

 

தீய மனைவி, தவறான தோழன், கீழ்ப்படியாத வேலைக்காரன் மற்றும் பாம்புடன் தங்கி இருப்பது மரணத்திற்குச் சமம்..இப்படி எல்லா நூல்களிலும் இந்தக் கருத்து வலியுறுத்தப் படுவதால், இதன் முக்கியத்துவம் புரிந்திருக்கும் என நினைக்கிறேன்.

 

सखा सोच त्यागहु बल मोरें। सब बिधि घटब काज मैं तोरें॥5

 

“எனவே தோழனே! என் வலிமையின் மீது நம்பிக்கை வைத்து உன் கவலையை விட்டு விடு. நான் எல்லாவிதத்திலும் உனக்கு உதவியாக இருப்பேன்” என்றான் இராமன்.

 

தொடரும்


No comments: