துளசிதாசரின்
கிஷ்கிந்தா
காண்டம்.
ஓர் ஆய்வு
பதிவு எண் 133
நேற்றைய தொடர்ச்சி
ஓ இரகு சிரேஷ்ட!
நான் தங்களுடைய மாயையால் இந்த தேகம்
எடுத்தவன், தங்களுடைய ௮ம்சமானவன், தங்களுடைய
சரணபக்தியை ஆசிரயத்திருக்கிறேன். என்னை சம்சார உபத்திரவத்தில் இருந்து காப்பாற்றவேண்டும், தங்களுடைய மாயை சூழ்ந்த மனமுடைய எனக்குத்
தங்களுடைய பாதார விந்தங்களின் தரிசனத்தால், மித்துரு, ௪த்ரு என்ற விஷ.பங்களில் வெறுப்புண்டாயிற்.று, யாவற்றும் எனக்குப் பிரமமாகவே தோற்றுறெது.
எனக்கு மித்ரன் யார், சத்துரு யார்? எதுவரையில் தங்களுடைய மாயையில் கட்டுண்டார்களோ
௮துவரையில் அவர்களுக்குக் குண விசேஷங்களிருக்கின்றன, அந்த மாயை எதுவரையில் இருக்கிறதோ ௮து வரையில்
பலவிதமான தோற்றமுண்டாகிறது, எதுவரையில் பலவிதமான தோற்றமுண்டாகிறகோ அதுவரையில் காலனால் பயமுண்டாகிறது, ஆகையால் ௮வித்தையை எவன் உபாசிக்கிறானோ அவன்
இருள்போன்ற அஞ்ஞானத்தில் மூழ்கிவிடுகிறான்., பெண்டிர், பிள்ளை முதலிய பந்தங்கள் யாவும் மாயையின்
காரணம்.
ஓ ராகவ! தாஸனாகிய
என்னை விட்டுத் தங்கள் மாயையை விலகும்படி. செப்யவேண்டும்., என் மனமானது எப்போதும் தங்களுடைய பாதபத்மங்களிலும், என் வாக்கானது தங்களுடைய நாமங்களை ஜெபிப்பதிலும், என்னிருகைகளும் தங்களுடைய பக்தர்களைச் சேவிப்பதிலும், என் சரீரமானது. தங்களுடைய சரீர ஆலிங்கனத்திலும் உபயோகப்படவேண்டும். என்னுடைப கண்கள் தங்களையும், தங்கள் மூர்த்திகளையும் தங்கள் பக்தர்களையும்,
என் குருவையும் எப்போதும் தரிசிக்க வேண்டும்.
என் செவியானது தங்கள் ௮வதாரச் சரிதைகளைக் கேட்கவேண்டும். என்னிரு பாதங்களும்
தங்களுடைய ஆலயக்களுக்குச் செல்லவேண்டும் “
தொடரும்
No comments:
Post a Comment