Wednesday, June 10, 2026

  

 

துளசிதாசரின்

கிஷ்கிந்தா காண்டம்.

ஓர் ஆய்வு

 

 

பதிவு எண் 122

 

நேற்றைய தொடர்ச்சி

 

சுக்ரீவனுக்கு  இராமானின் வலிமையின் மீது சந்தேகம் வருகிறது. பலசாலியான வாலியை இராமனால் வெல்ல முடியுமா? என்ற சந்தேகம் எழுகிறது.

 

ஆத்யாத்ம இராமாயணத்தில் सुग्रीवो5प्याह राजेन्द्र वाली बलवतां बली। कथं हनिष्यति भवान्देवैरपि दुरासदम्‌॥' (अध्यात्म० १। ६०) என்று சொல்லப்பட்டுள்ளது. அதாவது சுக்ரீவன் கேட்கிறான் “இராகவா! शूरश्च शूरमानी च प्रख्यातबलपौरुषः।बलवान् वानरो वाली संयुगेष्वपराजितः ' दृश्यन्ते चास्य कर्माणि दुष्कराणि सुरैरपि॥' வாலி எல்லோரையும் விட சிறந்த பலசாலி, தேவர்கள் கூட அவனுடன் மோதுவதற்குத் தயங்குவாரகள். தாங்கள் எப்படி அவனை வெல்வீர்கள்? “

 

சுக்ரீவன் இராமனுக்கு வைத்த தேர்வு

 

இலக்ஷ்மணன் சுக்ரீவனிடம் கேட்கிறான். “எதைச் செய்தால் உங்களுக்கு இராமனின் மீது நம்பிக்கை வரும்  என்று. சுக்ரீவன் உடனே துந்துபியின் எலும்புக் கூட்டைக் காட்டி இந்த எலும்புக் கூட்டை காலால் இரு நூறு விற் கடை தூரம் ஏறிய வேண்டும் स्मिन्कर्मणि निर्व॑त्ते श्रद्ध्या वालिनो वधम्‌॥ हतस्य महिषस्यास्थि पादेनैकेन लक्ष्मण। उद्यम्य प्रक्षिपेच्चापि तरसा द्वे धनु:शते॥'  என்கிறான். ஆனால் துளசிதாசர் இது பற்றி விவரங்கள் ஏதும் எழுதவில்லை. துளசிதாசர் बिनु प्रयास என்ற பதத்தைப் போடுகிறார். அதாவது இராமன் எந்தவித சிரமமுமில்லாமல் தனது கால் கட்டை விரலால் பத்து யோசனை தூரம் துந்துபியின் எலும்புக்கூட்டை தூக்கி எறிந்தார் என்று சொல்கிறார் துளசிதாசர்.

 

वम् उक्त्वा तु सुग्रीवम् सान्त्वयन् लक्ष्मणाग्रजः |

राघवो दुन्दुभेः कायम् पाद अंगुष्ठेन लीलया || -११-८४

तोलयित्वा महाबाहुः चिक्षेप दश योजनम् |

असुरस्य तनुम् शुष्कम् पादांगुष्टेन वीर्यवान् ||

 

ஆனால் அப்படியும் சுக்ரீவனுக்கு நம்பிக்கை வரவில்லை .

 

क्षिप्तम् दृष्ट्वा ततः कायम् सुग्रीवः पुनर् अब्रवीत् |

लक्ष्मणस्य अग्रतो रामम् तपन्तम् इव भास्करम्

हरीणाम् अग्रतो वीरम् इदम् वचनम् अर्थवत् || -११-८६

आर्द्रः मांसः प्रत्यग्रः क्षिप्तः कायः पुरा सखे |

परिश्रान्तेन मत्तेन भ्राता मे वालिना तदा|| -११-८७

लघुः संप्रति निर्मांसः तृण भूतः राघव |

क्षिप्ता एवम् प्रहर्षेण भवता रघुनंदन || -११-८८

न अत्र शक्यम् बलम् ज्ञातुम् तव वा तस्य वा अधिकम् |

आर्द्रम् शुष्कम् इति हि एतत् सुमहद् राघव अन्तरम् || ४-११-८९

एव संशयः तात तव तस्य यद् बलम् |

सालम् एकम् विनिर् भिद्या भवेत् व्यक्तिः बलाबले || -११-९०

 

அவன் இராமனிடம் “ சண்டையில் வாலி களைத்துப் போயிருந்தான். அப்போது அந்த எலும்புகூட்டில் மாமிசம் இருந்தது. அதனால் எடை அதிகமாக இருந்தது. ஆனால் தாங்கள் தூக்கி எறிந்தது மாமிசமற்ற வெறும் எலும்புக்கூடு. இதைவைத்து வாலியைவிட தாங்கள் பலசாலி என்று எவ்வாறு கருதுவது? ஆதலால் இந்தச் சால மரங்களில் ஒன்றையாவது தங்களது பாணத்தினால் துளைத்தால் தாங்கள் வாலியை விட பலசாலி என்று ஏற்றுக் கொள்வேன்” என்றான்.

 

தொடரும்


No comments: