Wednesday, June 17, 2026

 


 

துளசிதாசரின்

கிஷ்கிந்தா காண்டம்.

ஓர் ஆய்வு

 

 

பதிவு எண் 130

 

நேற்றைய தொடர்ச்சி

 

வாலியைக் கொல்ல வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்த சுக்ரீவன் இராமனின் பராக்கிரமத்தைக் கண்டதும் தனக்கு எதுவும் வேண்டாம் இராமனே போதும் என்று சொல்கிறான்

 

सपनें होइ भिखारि नृपु रंकु नाकपति होइ।

जागें लाभु हानि कछु तिमि प्रपंच जियँ जोइ॥92

 

எப்படிக் கனவில் அரசன் பிச்சைக்காரன் ஆகின்றானோ, பரதேசி சுவர்க்கத்தின் தலைவன் இந்திரனாகிறானோ, ஆனால் விழித்தபின் அதனால் எந்த வித லாப நஷ்டம் இல்லையோ அது போலதான் காணப்படும் உலகியலை உள்ளத்தில் ஆராய்ந்து பார்க்கவேண்டும் .

 

 

मोह निसा सब सोवनिहारा।

देखिअ सपन अनेक प्रकारा॥

जानिअ तबहिं जीव जय जागा।

जब  सब बिषय बिलास बिरागा॥

होड़ बिबेक मोह भ्रम भागा।

तब रघुनाथ चरन अनुरागा॥

सखा परम परमारथ एहू।

मन क्रम बचन रामपद नेह्‌॥

सखा समुझि अस पारिहारि मोह।

सियरघुबीर चरन रत होहू ॥

 

 

அனைவரும் அறியாமை என்ற இரவில் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள். அந்தத் தூக்கம் பலவித கனவுகளைக் காண்பிக்கிறது. உலகியலிலிருந்து விடுபட்டவர்கள் எப்பொழுது உலகியல் போக விலாசங்களில் முழுமையான வைராக்கியம் ஏற்படுகிறதோ  அப்பொழுதுதான் மனிதன் உலகில் விழிப்புடன் இருக்கிறான் என்று அறிய வேண்டும். விவேகம் வந்த பிறகு அறியாமை என்ற பிரமை ஓடிவிடுகிறது. அப்போது ரகுநாதன் திருவடிகளில் பிரேமை உண்டாகிறது. மனோவாக்கு செயல்களால் இராமன் திருவடிகளில் பிரேமை கொள்ள வேண்டும். அதுவே சிறந்த புருஷார்த்தம்.

 

இங்கு सुख संपति என்ற பதப் பிரயோகம் செய்கிறார் துளசிதாசர்.. இப்போது சுக்ரீவனுக்கு இராமன் வாலியைக் கொன்று தனக்கு அரசு, சொத்து, சுகம், குடும்பம் எல்லாவற்றையும் மீட்டுத் தந்துவிடுவார் என்ற நம்பிக்கை வந்துவிட்டது.. ஆனால் சுக்ரீவன் இப்போது சொல்கிறான்.ஐயனே! தாங்கள் இந்த உலகத்திற்கே பரமாத்மா. இதில் எந்தவித ஐயமுமில்லை மகாத்மாக்களும், துறவிகளும் சம்சார சாகரத்திலிருந்து விடுதலை பெற தங்களைப் பூஜிக்கின்றனர். எல்லோருக்கும் மோட்சம் அளிக்கும் உங்களிடமிருந்து அழியக்கூடிய பொருட்களை நான் எப்படிக் கேட்பேன்? தேவனே! பெண், புத்திரன், அரசு, செல்வம் எல்லாமே தங்களின் மாயத் திருவிளையாடல்கள். ஆனால் இப்பொழுது அவைகள் எனக்குத் தேவை இல்லை. என் மீது கருணை வையுங்கள். இன்று தாங்கள் எனக்குக் கிடைத்தது எனது பெரும் பாக்கியம். மண்ணைத் தோண்டியவனுக்குப் பெரிய பொக்கிஷம் கிடைத்தது போல தாங்கள் எனக்குக் கிடைத்திருக்கிறீர்கள். எனது மனம் தங்களிடமே ஈடுபாடுடன் இருக்கவேண்டும்.

 

தொடரும்


No comments: