Sunday, June 28, 2026

  

 

துளசிதாசரின்

கிஷ்கிந்தா காண்டம்.

ஓர் ஆய்வு

 

 

பதிவு எண் 141   

 

நேற்றைய தொடர்ச்சி

 

  இராமன் சுக்ரீவனை அழைத்துக் கொண்டு  வாலியுடன் யுத்தத்திற்குப் புறப்பட்டான்

 

 

तब रघुपति सुग्रीव पठावा। गर्जेसि जाइ निकट बल पावा॥13

सुनत बालि क्रोधातुर धावा। गहि कर चरन नारि समुझावा॥

 

 பிறகு சுக்ரீவனை வாலியுடன் போர் புரிய அனுப்பினான். இராமனின் வலிமையைத்  துணையாகக் கொண்டு சுக்ரீவன் வாலியின் இருப்பிடம் சென்று கர்ஜித்தான். வாலி அதைக் கேட்டதுமே வெகுண்டெழுந்து  விரைந்தோடி வந்தான்.. அப்போது அவனது மனைவி தாரை அவனைத் தடுத்து நிறுத்தி அறிவுறுத்தினாள்.. 

 

 

இங்கு तब रघुपति सुग्रीव என்ற பதத்தின் மூலம் என்ன சொல்லவருகிறார்? ஹிதோபதேசம் என்ற நூலில் असाधना वित्तहीना बुद्धिमन्तः सुहृत्तमा: | साधयन्त्याशु कार्याणि அதாவது ஆயுதங்கள் இல்லாமல், செல்வம் இல்லாமல் புத்திசாலிகள் தங்கள் நண்பர்கள் மூலம் காரியத்தை சாதித்துக் கொள்கிறார்கள். சுக்ரீவனிடம் இப்போது ஆயுதங்கள் இல்லை, ராஜ்ஜியம் இல்லை செல்வம் இல்லை ஆனாலும் இராமன் என்ற நண்பன் மூலம் காரியத்தைச் சாதித்துக் கொள்ளப் போகிறான்.. உண்மையைச் சொல்லப் போனால் இந்தச் சமயத்தில் இராமன் மற்றும் சுக்ரீவன் இருவரும் பெரிய ஆயுதங்கள் இல்லாதவர்கள், செல்வம் இல்லாதவர்கள். அவர்கள் செய்ய வேண்டிய காரியமோ பெரிது. கிஷ்கிந்தை அரியணையில் படைபலத்துடன் அமர்ந்துள்ள வாலியைக் கொன்று அரசையும், சுக்ரீவனின் மனைவியையும் மீட்டு சுக்ரீவன் வசம் ஒப்படைத்தல். இராமன் தனது தந்தைக்கு அளித்த வாக்குறுதிப்படி, இராமன் கிஷ்கிந்தை நகருக்குள் நுழைய முடியாது. இராமன் இல்லாமல் சுக்ரீவனும் வேறு படைபலம் இல்லாமல் கிஷ்கிந்தைக்குள் நுழைய முடியாது.. ஆகையால் இராமன் சுக்ரீவனை வாலியை கர்ஜித்து போருக்கு வரும்படி அறைகூவல் விடச் செய்தான். சுக்ரீவனின் கர்ஜனையைக் கேட்டால் கண்டிப்பாக வாலி வெளியே வருவான் என்பது இராமனின் எண்ணம்.

 

 

தொடரும்..............

 


No comments: