துளசிதாசரின்
கிஷ்கிந்தா
காண்டம்.
ஓர் ஆய்வு
பதிவு எண் 134
நேற்றைய தொடர்ச்சி..............
சுக்ரீவன் இராமனைப் புகழ்வதன்
தொடர்ச்சி.............
बालि परम हित जासु प्रसादा।
मिलेहु राम तुम्ह समन बिषादा॥
सपनें जेहि सन होइ लराई।
जागें समुझत मन सकुचाई॥10॥
இரகுவீரா! ஒரு வகையில் வாலி எனக்கு மிகவும் நன்மை செய்தவன் ஆவான்.
அவனுடைய கருணையினால் தான் என் துன்பங்களைத் துடைத்தருளும் தாங்கள் எனக்குக்
கிடைத்தீர்கள்.(அப்படிப்பட்ட உதவி செய்த) அவனோடு
நான் கனவில் சண்டை செய்தால் கூட விழித்து எழுந்ததும் அவனுடன் ஏன் சண்டை செய்தேன் என்று மனம்
வருந்துவேன்.
துளசிதாசர் सपने जेहि सन होड़ लरा्ई।" என்று சொல்கிறார். அதாவது கனவில் சண்டையிடும்போதே நான்
கூச்சப்படுவேன். ஆதலால் இனி கனவில் கூட வாலியுடன் நான் சண்டையிடமாட்டேன்..
என்று சொல்ல வருகிறான் சுக்ரீவன்.
பஞ்சாபிஜி என்ற உரையாசிரியர் எழுதுவதாவது” வாலி சுக்ரீவனை நாட்டை விட்டுத் துரத்தி
விட்டவன். அவனது மனைவியை அபஹரித்தவன். அவனை தாங்கள் கொல்ல வேண்டும் என்று கூறிய
சுக்ரீவன் திடீரென்று வாலி எனக்கு நன்மைதான் செய்துள்ளான் என்று கூறுகிறான்.
அதற்கு அவர் சொல்லும் விளக்கமாவது “இதுவரை வாலி எனது எதிரி என்றவன், திடீரென்று வாலி நல்லவன். எனக்கு நன்மையே செய்துள்ளான் என்றதும்
இராமன் அவனிடம் “இதுவரை நீ அவனை எதிரி என்றாயே. திடீரென்று எப்படி அவன் உனக்கு
நன்மைகள் செய்தவன் ஆனான். என்று கேட்டான். அதற்கு சுக்ரீவன் “தாங்கள் சொல்வது
சத்யம். ஆனால் நான் கனவில் ஒருவனுடன் சண்டை இடுகிறேன்.
கண்விழித்ததும் யாருடன் சண்டையிட்டேனோ
அவனை நேரில் கண்டதும் மனதில் எப்படி கூச்சம் உண்டாகுமோ, அதுபோல நான்
சொன்னது அறியாமையில் சொன்னது .இப்பொழுது அந்த அறியாமை என்ற கனவு அகன்று விட்டது..
வாலியின் விரோதம் ஒரு பொய் என்று தோன்றுகிறது.. முன்பு சொன்னவைகளை நினைத்து எனது
மனம் வெட்கப்படுகிறது.” என்றான்.
अब प्रभु कृपा करहु एहि भाँति। सब तजि भजनु करौं
दिन राती॥
எனவே ஐயனே! இவையனைத்தையும்
விட்டுவிட்டு இரவும் பகலும் தங்களையே
பூஜித்துக் கொண்டிருக்கும்படியான நிலையை எனக்குத் தந்தருளுங்கள்” என்றான்.
தொடரும்..............
No comments:
Post a Comment