துளசிதாசரின்
கிஷ்கிந்தா
காண்டம்.
ஓர் ஆய்வு
பதிவு எண் 138
நேற்றைய தொடர்ச்சி.............
இராமனின் நிலைமை
'सुनि बिराग संजुत”” இப்பொழுது சுக்ரீவனிடம் ஞானம், வைராக்கியம், பக்தி எல்லாமே வந்துவிட்டன. இதனால்
சுகம், சொத்து முதலிய லௌகிகச் சுகங்களைத் தியாகம் செய்கிறேன் என்றான். பிறகு
மோட்சங்களையும் தியாகம் செய்கிறேன் என்றான். ஆனால் வானர இனத்தைச் சேர்ந்தவனாதலால்
அவன் சஞ்சல மனதை உடையவன். ஆதலால் இவனது வைராக்கியம் நிலையானதாக இல்லை. இதனால் தனது
காரியத்தை முடித்துக் கொள்ள பிரபு இராமன் தனது மாய வலையை விரித்தார். அது என்ன மாய
வலை? இங்குதான் துளசிதாசர் இரண்டு வார்த்தைகளில் அது என்ன என்று சொல்லிவிடுகிறார்.
அதாவது “बोले बिहँसि”। இராமன் சிரித்துக் கொண்டே சொன்னான் என்று சொல்கிறார். அதாவது அவரது சிரிப்புதான் அவரது
மாய வலை என்று சொல்லாமல் சொல்கிறார் துளசிதாசர். அந்த மாய வலையில் சுக்ரீவனின்
ஞானம், வைராக்கியம் பக்தி எல்லாமே கரைந்து போயின என்கிறார் துளசிதாசர்.
பஞ்சாபி ஜி என்ற உரையாசிரியர் இராமன்
சிரித்தற்கானக் காரணத்தைக் கூறுகிறார்
1. வானரஜாதிக்கான சஞ்சலம், சபலம் ஆகியவற்றை
நினைத்துச் சிரித்தாராம். அதாவது சற்று நேரத்திற்கு முன் வாலி எனது முதல் எதிரி
என்றவன் இப்பொழுது எனக்கு நன்மை செய்துள்ளான் என்று சொல்கிறான்
2.
முதலில் வாலி வாதத்தை விரும்பியவன் இப்பொழுது ஞானம் வந்துவிட்டது என்று சொல்லி
சகோதரனைக் கொல்லும் விஷயத்தில் தன்னைக் குற்றமற்றவனாகக் காண்பித்துக் கொள்ள
விரும்புகிறான்.
இப்பொழுது இராமன் குழபத்திலும் தர்ம
சங்கடமான நிலையிலும் விழுந்துவிட்டான். காரணம் சுக்ரீவனின் புதிய வேண்டுகோளை
நிறைவேற்றினால் இராமன் செய்த பிரதிஞ்ஞைக்கு பங்கம் வந்துவிடும். இதனால்
இரகுகுலதிற்கு அவப்பெயர் ஏற்படும். “रघुकुलरीति सदा चलि आई प्रान जाहु बरु बचन न जाई॥”நிறை வேற்றவில்லை
என்றாலும் 'दीनबंधु कृपाल रघुराई” சூர்யவம்சத்திற்கு கெட்ட
பெயர் ஏற்படும். இந்த பிரச்சனைக்கு ஒரு முடிவு கட்டத்தான் சிரித்து தனது மாய வலையை
விரித்தான் இராமன் என்று சொல்லப்படுகிறது..
தொடரும்..............
No comments:
Post a Comment