துளசிதாசரின்
கிஷ்கிந்தா
காண்டம்.
ஓர் ஆய்வு
பதிவு எண் 132
நேற்றைய தொடர்ச்சி
வாலியைக் கொல்ல வேண்டும் என்று வேண்டுகோள்
விடுத்த சுக்ரீவன் இராமனின் பராக்கிரமத்தைக் கண்டதும் தனக்கு எதுவும் வேண்டாம்
இராமனே போதும் என்று சொல்கிறான்.
இதே கருத்து
ஆத்யாத்ம இராமாயணத்திலும் சொல்லப்படுகிறது முந்தைய பதிவின்
தொடர்ச்சி.
ஒ தேவதேவே? இப்போது நான் மற்ற எதையும் விரும்பவில்லை, எனக்கு அனுக்கிரகம் செய்யவேண்டும்.
இப்போது தங்கள் சேர்ச்கைப் பாக்கியத்தால் ஆனந்தத்தின் ௮நுபவத்தையடைர்தேன். ஸா.துக்களுக்குப்
பதியாகிய ஓ இராகவ! இப்போது தாங்கள் எனக்காக, என்னைப்போன்ற சமமான உருவத் துடன் வந்தவர், அனாதியான ௮வித்தையின் பந்தமானது சேதமடைந்தது, இந்த ௮வித்தையின் பந்தமானது, யாகத்தாலும், தானத்தாலும், கருமத்தாலும், எவ்வித
புண்ணியத்தாலும் நாசமடையாது, .
ஓ பிரபுவே!
தங்களுடைய ஸ்ரீபாதங்களைத் தரிசிப்பதால் உடனே பந்தமானது நாசமடையும், சந்தேகமில்லை. எவனுடைய மனம் அரைக்ஷண நேரமாவது
தங்களிடம் அசையாமல் நிற்கிறதோ அவனுடைய அனர்த்தங்களுக்கு, மூலகாரணமான ௮ஞ்ஞானமானது அந்தக் கணத்தில் நாசமடையும்,
ஓ
இராமச்சந்திர? ௮ந்தமனம் தங்களிடமோ அல்லது மற்றவிடத்திலோ
இருந்தபோதிலும் எப்போதும் எவனுடைய வாக்கானது இராம! இசாம/ என்.று இனிமையாகக்
கானம் செய்ததோ அ/வ்வாக்குடையவன் பிரம்மஹத்தி செய்தவனாயினும், ஸுராபானம் செய்தவனாயினும் பாதகங்கள்
யாவற்றிலும் இருந்து விடுபடுகிறான் , நான் ராஜ்யத்தை விரும்பவில்லை ; மனைவி, சுகம் முதலியவற்றையும் விரும்பவில்லை; சம்சார பந்தத்தை விடுவிக்கும், தங்களிடம் வைக்கும் பக்தியையே
விரும்புகிறேன்.
தொடரும்
No comments:
Post a Comment