Sunday, June 14, 2026

 


 

துளசிதாசரின்

கிஷ்கிந்தா காண்டம்.

ஓர் ஆய்வு 

 

பதிவு எண் 126

 

நேற்றைய தொடர்ச்சி

 

 

சுக்ரீவன் இப்போது மனம், வாக்கு, செயல் மூலமாக இராமனிடம் சரணடைந்து விட்டான். காரணம் அவன் இராமனைப் பற்றி முழுவதுமாக அறிந்து கொண்டான். ஒருவரைப் பற்றி தெரிந்து கொள்ளாமல் அவர் மீது நமக்கு எந்தவித உணர்வுகளும் உண்டாவதில்லை.

 

  

जानें बिनु होइ परतीती । बिनु परतीति होइ नहि प्रीती ।।

प्रीति बिना नहि भगति दृढ़ाई । जिमि खगपति जल कै चिकनाई।।

 

ஆனால் இராமனைப் பற்றி முழுவதுமாகத் தெரிந்தவுடன் முதலில் நம்பிக்கை பிறந்தது; அது அன்பாயிற்று; பீறகு அது பக்தியாயிற்று

 

சுக்ரீவன் இராமனின் திருவடிகளில் விழுந்து மீண்டும் வணங்குவதன் காரணம் என்ன? இதற்கு உரையாசிரியர்கள் சொல்லும் காரணம் அவன் இராமனின் பலத்தை அறிய அவரை இரு தேர்வுகள் எழுதச் சொன்னதுதான். இராமனின் பலம் புரிந்த பிறகு தனது தவறை உணர்த்ததால் அவரது பாதங்களில் விழுந்து வணங்கினான் என உரையாசிரியர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் தனது நன்றியைத் தெரிவிப்பதற்காகவும் அவன் விழுந்து வணங்கினான் என்று உரையாசிரியர்கள் தெரிவிக்கின்றனர். 

 

தேவர்கோன் இந்திரனும் தேவரும் எல்லாரும்

செருவில் நின் கணைக்கு எதிர் நிற்கலாரே;

ஏழு பெருஞ் சாலமும், மால்வரையும், மண்ணையும்

ஓர் அம்பினால் ஊடறுத்தாய், இராகவா!

இன்று எனது துயரமெல்லாம் நீங்கியது;

இந்திரன்-வருணன் ஒப்ப நின்னை நண்பனாகப் பெற்றேன்;

இனி வாலி என்ன? உலகில் யார் உனக்கு எதிர்?

 


 பிரபுவை அறிந்த பின் சுக்ரீவனுக்கு ஞானம் வந்தது அஞ்ஞானம் மறைந்தது. . பிரபுவைப் பற்றித் தெரிந்து கொள்வதுதானே ஞானம். பிரபுவின் மீது அன்பு ஏற்பட்டபோது பேச்சு வரவில்லை. ஞானம் வந்த பிறகு சுக்ரீவனுக்குத் தைரியம் வந்தது. அதனால் சொல்கிறான் नाथ कृपा मन भयउ अलोला'அவன் இராமனிடம் சொல்கிறான் अब प्रभु कृपा करहु एहि भाँति। सब तजि भजनु करौं दिन राती

 

ஏழ்சாலம் ஊடுருவி ஏகணையால் மண்ணளந்தாய்,

சூழ் மால்வரை துளைத்த தோன்றலே வாழ்

என் துன்பம் இன்று ஒழிந்தது; இனி வாலி என்னே?

நின் பலமே எனக்கு நெறி.

 

 நான்  எல்லாவற்றையும் விட்டுவிட்டு எப்போதும்  உனது நினைவிலேயே இருக்கவேண்டும். உங்கள் புகழே பாடவேண்டும் அதற்கு தாங்கள் அருள்புரிய வேண்டும்” என்று சொல்கிறான் சுக்ரீவன்.

 

தொடரும்


No comments: