காலை வணக்கம்
துளசிதாசரின்
கிஷ்கிந்தா
காண்டம்.
ஓர் ஆய்வு
பதிவு எண் 116
நேற்றைய தொடர்ச்சி
இராமன் எப்படி வாலியைக் கொல்ல உடனே ஒத்துக்
கொள்கிறான்? உரையாசிரியர்கள் சொல்வதாவது சுக்ரீவன் இராமனின் நண்பன். நண்பனின்
துயரத்தைத் தனது துன்பமாக நினைக்கிறான் இராமன். ஆதலால் சுக்ரீவனுக்காக வாலியைக்
கொல்லுவேன் என்றான். जो अपराधु भगत कर करई। राम
रोष पावक सो जरई॥ ॥ எவன் ஒருவன் இராமனின்
பக்தனுக்கு குற்றம் இழைக்கிறானோ அவன் இராமனின் கோபம் என்னும் நெருப்பில் வெந்து
சம்பலாவான்.
जे न मित्र दुख होहिं दुखारी। तिन्हहि बिलोकत पातक भारी॥
निज दुख गिरि सम रज करि जाना। मित्रक दुख रज मेरु समाना॥1॥
ஆத்யாத்ம இராமாயணம்
वसाम्यद्य भवत्पादसंस्पर्शात्सुखितोऽस्म्यहम् ।
मित्रदुःखेन सन्तप्तो रामो राजीवलोचनः ॥ ५८॥
हनिष्यामि तव द्वेष्यं शीघ्रं भार्यापहारिणम् ।
इति प्रतिज्ञामकरोत्सुग्रीवस्य पुरस्तदा ॥ ५९॥
நண்பனின் துன்பத்தைக் கண்டு வருத்தம் கொள்ளாதவர்களைப் பார்த்தாலே
பாவம் வந்து சேரும்.. எவன் தனது மலை போன்ற துன்பத்தைத் தூசு போலவும், நண்பனுக்கு
வந்த தூசு போன்ற துன்பத்தை மலைபோலவும் நினைக்கிறானோ அவனே உண்மையான நண்பன்” .எவன்
ஒருவன் நண்பனின் துன்பத்தைக் கண்டு தான் துயரப்படுவதில்லையோ அவன் மகாபதகன்..
அவனுடன் தொடர்பில் இருப்பவர்களும் மகாபாதகர்கள். இங்கு கையை விட்டுப் போன அயோத்தி,
வனவாசம், சீதையின் இழப்பு இப்படி மலை போன்ற துன்பங்களை உடைய இராமன் அவைகளை மறந்து
சுக்ரீவனுக்கு உதவி செய்ய முன்வருகிறான்.
இதைத்தான் வினயபத்ரிகா என்ற நூலில் சொல்கிறார்.
तिय-बिरही सुग्रीव सखा लखि, प्रानप्रिया बिसराई।
இராமன் தனது துன்பங்களை மறந்து சுக்ரீவனின் சிந்தனையில்
ஆழ்ந்துவிட்டான் என்கிறார் துளசிதாசர்.
सखा सोच त्यागहु बल मोरें।
सब बिधि घटब काज मैं तोरें॥
==============
தொடரும்
No comments:
Post a Comment