துளசிதாசரின்
கிஷ்கிந்தா
காண்டம்.
ஓர் ஆய்வு
பதிவு எண் 139
நேற்றைய தொடர்ச்சி.............
இராமன் ஏன் சுக்ரீவனைப் பார்த்து கேலியாகச்
சிரித்தான்?. சில உரையாசிரியர்கள் கூறுவதாவது . சுக்ரீவன் வாலி இறந்தவுடன்
இராமனால் கிஷ்கிந்தையின் அரசனானவுடன் தான் இதுவரை கூறியதையும் இராமனின்
உபதேசத்தையும் மறந்து விடுவான் என்று அறிந்துதான் சிரித்தான் என்று கூறப்படுகிறது.
காரணம் அவனது அடிப்படையான வானர குணம். அரண்மணை சுகங்களைக் கண்டவுடன்
எல்லாவற்றையும் மறந்துவிடுவான் என்று இராமன் தெரிந்து வைத்திருந்தான்.. தனது நிலையிலிருந்து
சுக்ரீவன் திடீரென்று மாறியதும் .
नट मरकट इव सबहि नचावत। रामु खगेस बेद अस गावत॥12॥
* लै सुग्रीव संग रघुनाथा। चले चाप सायक गहि हाथा॥
காக புஜண்டர் சொல்கிறார்
இராமன் குரங்கை வைத்து வித்தை காட்டுபவன் எப்படி குரங்கை ஆட்டுவிக்கிறானோ அது போல
ஸ்ரீ இராமன் நம் எல்லோரையும் ஆட்டுவிக்கிறான். என்று வேதங்கள் சொல்கின்றன.
கையில் வில் அம்புகளை எடுத்துக் கொண்டு சுக்ரீவனுடன் இராமன்
கிளம்பினான். சுக்ரீவனிடம் இராமன் தனது மாய வலையை வீசினான் என்று சொன்னோம். இராமன்
தனது நிலைப்பாட்டைச் சொல்லி கிளம்பு என்று சொன்னவுடன் எந்தவித மறு பேச்சின்றி
சுக்ரீவன் வாலியுடன் யுத்தம் செய்தற்காகக் கிளம்பினான் नट मरकट इव என்று
துளசிதாசர் சொல்கிறார். எல்லோரையும் ஆட்டுவிப்பன் இராமன் என்று வேதங்கள்
சொல்லும்போது சுக்ரீவன் எம்மாத்திரம்? குரங்காட்டி தனது விருப்பபடி வானரங்களை
ஆட்டுவிப்பது போல இராமன் தனது விருப்பபடி எல்லோரையும் ஆட்டுவிக்கிறான். குரங்குகள்
குரங்காட்டி வசம் இருப்பது போல நாம்-எல்லா ஜீவன்களும்- எல்லோரும் அந்த இறைவன் வசம் உள்ளோம்.
राम कीन्ह चाहहिं सोइ होई। करै अन्यथा अस नहिं कोई॥
இராமன் எதைச் செய்ய விரும்புகிறாரோ அதுதான்
நடக்கும்.அவருக்கு எதிராக யாரும் எதுவும் செய்துவிட முடியாது. அதாவது இராமன் என்ன
எழுதியுள்ளானோ அதுதான் நடக்கும் होड़हि सोड़ जो राम राचि राखा. இராமன் தான் எல்லோருக்குமான ஒரே பெரிய கடவுள் राम रजाइ सीस सबही कें॥4॥
தொடரும்..............
No comments:
Post a Comment