துளசிதாசரின்
கிஷ்கிந்தா
காண்டம்.
ஓர் ஆய்வு
பதிவு எண் 93
நேற்றைய தொடர்ச்சி..
சுக்ரீவன் இராமனிடம் சீதையைப் பற்றிய
விவரங்களைச் சொல்கிறான்.
சுக்ரீவன் சீதையைப் பற்றிக் கூறுதல்
मंत्रिन्ह सहित इहाँ एक बारा। बैठ रहेउँ मैं करत बिचारा॥
गगन पंथ देखी मैं जाता। परबस परी बहुत बिलपाता॥2॥
“நான் ஒருமுறை இங்கு அமைச்சர்களுடன் (நளன்,
நீலன், ஜாம்பவான் மற்றும் ஹனுமன்) அமர்ந்து ஆலோசனை செய்து கொண்டிருந்தேன்.
அப்பொழுது ஒருவன் ஒரு பெண்ணைக் கவர்ந்து ஆகாய மார்க்கமாகச் சென்றதையும், அழுது
கண்ணீர் வடித்தவளாய் “புலம்பிக்
கொண்டிருந்ததையும் பார்த்தோம்” என்றான் சுக்ரீவன்,
இதற்கு சமமான சுலோகம் ஆத்யாத்ம இராமாயணத்தில் உள்ளது.
एकदा मन्त्रिभिः सार्द्ध स्थितो5हं गिरिमूर्द्धनि।
विहायसा नीयमानां केनचित् प्रमदोत्तमाम्॥'
===================
राम राम हा राम पुकारी। हमहि देखि दीन्हेउ पट
डारी॥
मागा राम तुरत तेहिं दीन्हा। पट उर लाइ सोच अति
कीन्हा॥3॥
“எங்களைப் பார்த்ததும் இராமா இராமா என்று அழைத்தபடியே ஓர் ஆடையைக்
கீழே போட்டார்” என்றான் சுக்ரீவன். இராமன் அந்த ஆடையைக் கொண்டுவரச் சொன்னான். அந்த
ஆடையை மார்போடு அனைத்துக் கொண்டு மிகவும் வருந்தலானான்..
இங்கு உரையாசிரியர்கள் சொல்வதாவது. பொதுவாக பெண்கள் தங்கள் கணவன் பெயரைச் சொல்வதில்லை. ஆனால் இங்கு சீதை
இராமா! இராமா! என்று அலறியதன் மூலம் நான்
இராமனின் மனைவி. எனது நிலையை எனது கணவர் இராமனிடம் தெரிவியுங்கள் என்பதற்காகப்
பெயரைச் சொன்னார் என்று சொல்கின்றனர். மேலும் சீதை மிக உயரத்தில் சென்று
கொண்டிருந்ததளால் மெதுவாகச் சொன்னால் கீழே நிற்கும் குரங்குகளுக்கு கேட்காது என்று
எண்ணி உரத்த குரலில் கூறியதாக உரையாசிரியர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் ஆபத்தில்
இருக்கும் சமயம் அதிலிருந்து தன்னைக் காத்துக் கொள்ள கணவன், மகன், குரு ஆகியோர்
பெயரைச் சொல்வதில் தவறு ஏதும் இல்லை என்று உரையாசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
தொடரும்..
No comments:
Post a Comment