துளசிதாசரின்
கிஷ்கிந்தா
காண்டம்.
ஓர் ஆய்வு
பதிவு எண் 78
நேற்றைய தொடர்ச்சி
ஹனுமன் இராமனிடம் வானரர்களின் அரசன்
சுக்ரீவன் உங்கள் அடியார்களில் ஒருவன் सो सुग्रीव दास तव अहर्डड என்று சொல்கிறான்.
இங்கு ஒரு கேள்வி சுக்ரீவன் இன்னும் இராமனைப் பார்க்கவேயில்லை. அப்படி இருக்க
ஹனுமன் சுக்ரீவன் இராமனின் அடியார்களில்
ஒருவன் என்று எப்படிக் கூறுகிறான்?
இங்கு எல்லோரையும் பால காண்டத்திற்கு அழைத்துச் செல்கிறேன். தேவர்கள்
பிரம்மாவிடம் சென்று இராவணனால் ஏற்பட்டுள்ள துன்பத்தை விவரித்தனர்.
निज लोकहि बिरज्चि गे, देवन्ह इहइ सिखाइ।
बानर-तनु धरि धरि महि, हरि-पद सेवहु जाइ ॥१८७॥
அப்பொழுது பிரம்மா அவர்களிடம்
மகாவிஷ்ணு பூமியில் மானிட அவதாராம் எடுக்கப் போகிறார். தாங்கள் எல்லோரும்
வானர உருவம் எடுத்து பூமிக்குச் சென்று அவருக்குச் சேவை செய்யுங்கள் என்றார்..
ஹனுமன் இராமரிடம் சுக்ரீவன் உங்கள் பக்தர். பிரம்மாவின் கட்டளையை ஏற்று हारे मारग चितवहिं मति
धीरा। உங்கள் வருகையை எதிர்பார்த்து காத்திருக்கிறார் என்று
சொல்வதாகப் பொருள்.
இங்கு மீண்டும் ஒரு கேள்வி எழலாம். ஹனுமன் இராமனை எப்போது அறிந்து
கொண்டானோ, அப்பொழுதே சுக்ரீவன் உங்கள் அடியார்களில் ஒருவன் என்று சொல்லி
இருக்கலாமே? என்று. சந்தேகமில்லாமல் சுக்ரீவன் இராமனின் பக்தன் தான். துளசிதாசரே
சொல்கிறார் 'हम सब सेवक अति बड़भागी। संतत सगुन ब्रह्म अनुरागी॥ निज
इच्छा अवतरड प्रभु सुर महि गो द्विज लागि। सगुन उपासक संग तब रहहिं मोक्ष सुख
त्यागि॥ நாங்கள் எல்லோரும் உங்கள் சேவகனாக இருப்பதில் மிகுந்த
அதிர்ஷ்டசாலிகள். தேவர்கள், பூமி, பசு, மற்றும் ப்ராம்மணர்களுக்காக இறைவன் தனது
விருப்பபடி அவதாரம் எடுக்கிறான். அந்த இராமனுக்குச் சேவை செய்வதில் மோக்ஷத்தையும்
தியாகம் செய்யத் தயாராக அடியார்கள் உள்ளனர்.. ஆக இராமனைச் சந்திக்காமலேயே சுக்ரீவன்
இராம பக்தனாக இருப்பதில் வியப்பில்லை. பல அடியார்கள் இறைவனைச் சந்திக்காமலேயே
அவரது பக்தனாக இருந்து அவருக்குச் சேவை செய்வதில்லையா?
இதற்கு நிறைய உதாராணங்கள் உண்டு. அடுத்த
பதிவில் பார்ப்போம்.
தொடரும்
No comments:
Post a Comment