துளசிதாசரின்
கிஷ்கிந்தா
காண்டம்.
ஓர் ஆய்வு
பதிவு எண் 72
நேற்றைய தொடர்ச்சி..
இதை இராம சரித மானசிலும்(சுந்தர காண்டம்) இராமன் சொல்லுவதாக துளசி
தாசர் சொல்கிறார்
जननी जनक बंधु सुत दारा । तनु धनु भवन सुहृदु परिवारा।
सब कर ममता ताग बटोरी ।
मम पद मनहिं बाँधि बर डोरी।
समदरसी इच्छा कछु नाहीं। हरष सोक भय नहिं मन
माहीं॥3॥
अस सज्जन मम उर बस कैसें। लोभी हृदयँ बसइ धनु
जैसें॥
तुम्ह सारिखे संत प्रिय मोरें। धरउँ देह नहिं
आन निहोरें॥4॥
இராமன் தனது பக்தர்களுக்குச்
சொல்லிகொள்வது “நீ தாய் தந்தை மனைவி
குழந்தைகளுக்குச் செய்யவேண்டிய கடமைகளைச் சரிவரச் செய்து, மோகத்தை விட்டு உனது
மனத்தை எனது பாதங்களில் சமர்ப்பணம் செய்துவிடு. பேராசை கொண்டவனின் இதயத்தில் உள்ள செல்வப்பற்று
போல அத்தகைய பக்தர்கள் எனது இதயத்தில்
தங்கிவிடுகின்றனர். அத்தகையவர்கள் மட்டுமே எனக்குப் பிரியமானவர்கள். நசன் எவருடைய
தயவுக்கும் கட்டுப்பட்டு அவதரிப்பதில்லை”
உத்தர காண்டத்திலும் இறைவன் காக புஜண்ட
முனிவரிடம் இதே கருத்தைத் தெரிவிக்கிறார்
सुचि सुसील सेवक सुमति प्रिय कहु काहि न लाग।
श्रुति पुरान कह नीति असि सावधान सुनु काग॥86॥
நல்ல நடத்தை, புனிதமான, நல்ல அறிவை உடைய
அடியாரை எந்தக் கடவுளுக்குத்தான் பிடிக்காது. இதைத்தான் வேதங்களும் நீதி
சாஸ்திரங்களும் சொல்கின்ச்றன.
'साधवो हृदयं महां साधूनां हृदयं त्वहम्।
मदन्यत् ते न जानन्ति नाहं तेभ्यो मनागपि॥'
“எனது அன்பான பக்தர்களே எனது இதயம் . நான்
அவர்களின் இதயம். அவர்களுக்கு என்னைத் தவிர ஒன்றும் தெரிவதில்லை. எனக்கு அவர்களைத்
தவிர ஒன்றும் தெரியாது,”
सर्वेषामेव भक्तानामिष्टः प्रियतमो मम ।
यो हि ज्ञानेन मां नित्यमाराधयति नान्यथा
கூர்மபுராணம் ஈஸ்வர் கீதா பகுதியிலிருந்து
மேற் கண்ட சுலோகம் கொடுக்கப்பட்டுள்ளது .
தாய் தந்தை, பிள்ளை, துணைவி –
தானும், வீடும், செல்வமும்!
உறவுகள் எல்லாம் விலக்கினேன் –
உன் பாதத்தில் மனம் பிணைத்தேன்!
சமம் எனும் பார்வை எனக்குள் –
சஞ்சலமில்லை, ஆசை இல்லை!
சோகம், சந்தோஷம், பயமில்லை –
சதாசிவம் எனும் நிலைதான்!
பக்தன் எனில் உன் உள்ளத்தில் –
பரமன் எனில் பக்தன் உள்ளத்தில்!
ஆசை கொண்டவன் செல்வத்தில் வாழ்வான் –
ஆசை இல்லாதவன் உன்னில் வாழ்வான்!
தொடரும்
No comments:
Post a Comment