துளசிதாசரின்
கிஷ்கிந்தா
காண்டம்.
ஓர் ஆய்வு
பதிவு எண் 77
இன்று பாதிக்கப்பட்டவனாக இருந்தாலும்
பின்னால் பயனுள்ளவனாக இருப்பான் சுக்ரீவன் என்று பொருள் படும்படி பேசுகிறான்
அனுமன்.
प्रीति बिरोध समान सन, करिय नीति असि आहि ।
जौँ मृगपत्ति बध मेडुझन्हि, अल कि कहइ कोउ ताहि ॥
அதுபோல அன்பும் விரோதமும் தனக்குச்
சமமானவர்களுடனேயே வைக்கவேண்டும் என்பதே உலக நீதி. சிங்கம் தவளையைக் கொல்வதால்
சிங்கம் பலசாலி என்று யாரும் கூறமாட்டார்கள் என்ற நியதியில் தாங்கள் சுக்ரீவன்
என்ற அரசனுடனேயே நட்புக் கொள்வதே உலக நியதி என்ற தொனியில் ஹனுமன் பேசுகிறான்.
இவ்வாறு கூறிவிட்டு இராமன் இலக்ஷ்மணன் இருவரையும் தோளில் சுமந்து சுக்ரீவனிடம் அழைத்துச்
சென்றான்.
இங்கு சுக்ரீவனை ஹனுமன் कपिपति வானர அரசன் என்று அழைக்கிறான்/ எந்த
சுக்ரீவன் என்ற கேள்வி எழாமலேயே மலைகளில் வசிக்கும் சுக்ரீவன் என்று
அடையாளப்படுத்தி விட்டான். வாலிதான் வானரங்களின் அரசன். பிறகு எப்படி சுக்ரீவனை
வானர அரசன் என்று அழைக்கிறான் ஹனுமன்.?
இங்கு வாலி இறந்தாதக் கருதி சுக்ரீவனை கிஷ்கிந்தையின் அரசனாக முடி சூட்டி
மகிழ்ந்தனர் அங்குள்ள அமைச்சர்கள். வாலி சுக்ரீவனை அடித்துத் துரத்தினாலும்
ஜாம்பவான், ஹனுமான் நளன் நீலன் போன்ற அமைச்சர்கள் சுக்ரீவனுக்கு ஆதரவு தெரிவித்து
அவனுடன் வந்துவிட்டனர். ஆதலால் அவனை இன்னும் அரசனாகவே கருதுகின்றனர். வனத்தில்
சூர்ப்பனகையிடம் இராமனைப் பற்றித் தெரிவிக்கும்போது இலக்ஷ்மணன், கைகேயி அவனை
வனத்திற்கு அனுப்பிய பிறகும் “प्रभु समरथ कोसलपुर राजा। அவனை கோசல நாட்டின்
அரசன் என்றே சொல்கிறான்.
அடுத்து ஹனுமன் இராமனிடம் சுக்ரீவனிடம்
நட்புக் கரம் நீட்ட வேண்டும் என்று சொல்லப் போகிறான். பொதுவாக எவருமே தனக்குச்
சமமானவருடன் தான் நண்பனாக இருக்க விரும்புவார். இராமன் அயோத்தியின் அரசன். அப்படி
என்றால் சுக்ரீவனையும் ஒரு நாட்டின் அரசன் என்று அறிமுகப் படுத்தினால் தான் இராமன்
நட்புக்கரம் நீட்ட வ்ரும்புவான் என்று நினைத்தே ஹனுமன் அவ்வாறு சொன்னான்.
ஹனுமன் இராமனிடம் வானரர்களின் அரசன்
சுக்ரீவன் உங்கள் அடியார்களில் ஒருவன் सो सुग्रीव दास तव अहर्डड என்று சொல்கிறான்.
இங்கு ஒரு கேள்வி சுக்ரீவன் இன்னும் இராமனைப் பார்க்கவேயில்லை. அப்படி இருக்க
ஹனுமன் சுக்ரீவன் இராமனின் அடியார்களில்
ஒருவன் என்று எப்படிக் கூறுகிறான்?
தொடரும்
No comments:
Post a Comment